Friday, 20 November 2020

சூரசம்ஹாரம் வரலாறு

சூரசம்ஹாரம் வரலாறு:

 



                         படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் , அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான்.

                        சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து,தனக்கு சாகாவரம் வேண்டும் என சிவனிடம் கேட்டான்.பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்றார்  சிவன், சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். 

                          சூரபத்மன் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர்.

                           சிவனும், தனது நெற்றிக் கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் , வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

                          அந்த தீப்பொறிகள் ஆறும்ஆறு குழந்தைகளாகத் தோன்றின!
அந்த ஆறு குழந்தைகளையும்ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.

                          முருகப்பெருமானுக்கும் ,சூரபத்மனுக்கும் போர் நடந்தது ...
முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய ‘வேலாயுதத்தை’ விடுத்தார்.

                         வேல் பட்டதும் , சூரபத்மனாக இருந்த மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச் சின்னமாகவும் ஆக்கினார்.

சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினார்,திருச்செந்தூர் , மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை.தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான்.

எனவே மறுநாள் ,முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடு தான் விழா நிறைவு பெறுகிறது.

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 
 
 

No comments:

Post a Comment