Friday, 20 November 2020

ஸ்ரீ வெள்ளாடைசித்தர்,வரலாறு

ஸ்ரீ வெள்ளாடைசித்தர் ,அப்புபிள்ளையூர், கொழிஞ்சாம்பாறை,பாலக்காடு மாவட்டம்.


வரலாறு:
                     

                     சோழநாட்டுத் தஞசை மண்ணின் பூர்வீகப் பிறப்பான ஸ்ரீ சிற்றம்பல சுவாமிகள் கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகில் உள்ள அப்புபிள்ளையூர் என்னும் ஊரில் தர்மவான் அப்புபிள்ளை பழனியாயி தம்பதிகளுக்கு 1899 ம் ஆண்டு கார்த்திகை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அருள் மகனாக அவதரித்தார். பெற்றோர் அவருக்கு சிற்றம்பலம் என பெயரிட்டு அழைத்தனர்.

                     ஈசனின் அருளால் சிவஞான குருவாகிய ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் சுவாமிகளிடம் இருந்து வாசியோகத்தின் சூட்சமங்களை அறிந்து கொண்டார்.

                     பழனியில் ஆறுமாத காலம் தவமிருந்து ஸ்ரீ போகரின் தரிசனம் பெற்றார்.ஸ்ரீ போகரின் மந்திர உபதேசத்தினால் எண்ணற்ற சித்திகளையும் ஆற்றல்களையும் கைவரப்பெற்றார். ஸ்ரீ போகரின் வழிகாட்டுதலின் படி பொதிகை மலை சென்று தவம் செய்து மஹா குரு அகத்தியரின் தரிசனமும் பெற்றார்.

                      தாம் வாழ்ந்த காலத்தில் பற்பல சித்துக்கள் செய்தும், தம் மூலிகை மருத்துவ சக்தியால் ஏழைகளுக்கு தீர்க்கமுடியாத பல நோய்களையும் தீர்த்து வைத்து, அவர்களது பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார்.

                  இறைஅருள் கொண்டோருக்குத் தம்மை வெளிப்படுத்தி, தம் கரங்களில் மயிற்பீலி வைத்துக்கு கொண்டு அவர்களை ஆசீர்வதிப்பார்.

                 அவர் அறிவித்தபடி 2008 ம் ஆண்டு கார்த்திகை மாதம் மூல நட்சத்திரத்தில் ஜீவா முக்தி அடைந்தார்.

லொகேஷன்:https://goo.gl/maps/bRp4YG5nuZQKGbaS7
தொடர்புக்கு:9994974557
------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:

Post a Comment