Tuesday, 17 November 2020

நவகைலாயங்கள்

     நவகைலாயங்கள்



வரலாறு:
                 அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.

நவகைலாயங்கள்:
            பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களை நவகைலாயங்கள் என்று அழைக்கின்றனர். இவற்றில் முதல் மூன்று தலங்களை மேல்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று தலங்களை நடுகைலாயங்கள் என்றும், இறுதி மூன்றினை கீழ்க்கைலாயங்கள் என்றும் வகைப்படுத்துகின்றனர்.

            இந்த நவகைலாயத் தளங்களில் நவக்கிரங்களின் வழிபாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தத் தலங்களில் நவக்கிரங்கள் வழிபட்டுள்ளன என்று கூறப்படுகிறது

ஒன்று:

        கோயில்:பாபநாசநாதர் கோயில்     
        ஊர்:பாபநாசம்
        வழிப்பட்ட கிரகம்:சூரியன்
        கைலாய வகை:மேல்கைலாயம்

இரண்டு:
        கோயில்:கைலாசநாதர் கோயில்
        ஊர்:சேரன்மகாதேவி
        வழிப்பட்ட கிரகம்:சந்திரன்
        கைலாய வகை:மேல்கைலாயம்

மூன்று:
        கோயில்:கைலாசநாதர் கோயில்
        ஊர்:கோடகநல்லூர்
        வழிப்பட்ட கிரகம்:செவ்வாய்
        கைலாய வகை:மேல்கைலாயம்

நான்கு:
        கோயில்:கோத பரமேசுவரர் கோயில்
        ஊர்:குன்னத்தூர்
        வழிப்பட்ட கிரகம்:இராகு
        கைலாய வகை:நடுகைலாயம்

ஐந்து:
        கோயில்:கைலாசநாதர் கோயில்
        ஊர்:முறப்பநாடு
        வழிப்பட்ட கிரகம்:குரு
        கைலாய வகை:நடுகைலாயம்

ஆறு:
        கோயில்:கைலாசநாதர் கோயில்
        ஊர்:திருவைகுண்டம்
        வழிப்பட்ட கிரகம்:சனி
        கைலாய வகை:நடுகைலாயம்

ஏழு:
        கோயில்:கைலாசநாதர் கோயில்
        ஊர்:தென்திருப்பேரை
        வழிப்பட்ட கிரகம்:புதன்
        கைலாய வகை:கீழ்கைலாயம்

எட்டு:
        கோயில்:கைலாசநாதர் கோயில்
        ஊர்:ராஜபதி
        வழிப்பட்ட கிரகம்:கேது
        கைலாய வகை:கீழ்கைலாயம்

ஒன்பது:
        கோயில்:கைலாசநாதர் கோயில்
        ஊர்:சேர்ந்தபூமங்கலம்
        வழிப்பட்ட கிரகம்:சுக்கிரன்
        கைலாய வகை:கீழ்கைலாயம்
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg


2 comments:

  1. Very nice amazing unbelievable information post thanks siddargal pugal ongattum

    ReplyDelete