கார்த்திகை 07ஆம் நாள்:22.11.2020,ஞாயிற்றுக்கிழமை குருபூஜை விழா
தவத்திரு முத்திருளாண்டி சுவாமி,பெரியகோட்டை தெக்கூர்,சிவகங்கை
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றார் மாணிக்கவாசகர். சிவபெருமானை வணங்குதற்கும் அவனது இன்னருள் இருந்தாலே இயலும். இதுகாறும் நாம் அறிந்த சித்தர்களில் பலர் இயல்பான இல்லறத்தில் இருந்தவர்களும், பேருந்து - சிற்றுந்து இயக்குனர்களுள் சித்து நிலையை அடைந்தவர்கள், பனைமரத்தில் ஏறி கள்ளிறக்கும் கூலித் தொழிலாளியும் கூட கூத்தபிரானின் அருட் பார்வையினால் உயர்ந்த சித்த மார்க்கத்தில் இணைந்தார். இன்னும்..இன்னும்.. நாம் அறியாத வகையில் நம்மோடே ஞான மார்க்கத்தின் வழியில் பயணிப்போர் எத்தனை... எத்தனை... ஆன்மாக்களோ!
அவ்வகையில் தன் வாழ்வில் கண்ட அன்றாட நிகழ்வினால் ஏற்பட்ட சிறு மாற்றத்தினால் உயரிய ஞான மார்க்கத்தின் பாதையில் சென்று முக்தியடைந்த ஒரு மகானின் சரிதையை அறிந்து கொள்வோம்.
மருது சகோதரர்கள் உதித்த வீரம் செறிந்த சிவகங்கை மண்ணில் பெரிய கோட்டையில் தெக்கூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர் ஸ்ரீ முத்திருளாண்டி சுவாமிகள்.
வேளாண் குடியில் தோன்றி இயல்பிலேயே நற்குணத்துடனும், உயர் பண்பு நலன்களோடும் விளங்கி, இல்லற வாழ்வில் இனிமை கண்டு.. இரு ஆண், இரு பெண் மக்களுக்கு நல்ல தந்தையாகவும்.. இரு சகோதரர்களுக்கு இரத்தபந்தமாகவும் விளங்கி, ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்க ஜூரியாகப் பணியாற்றியதோடு, பெரிய கோட்டையில் குருநாத சுவாமி திருக்கோவில் தர்மகர்த்தாவாகவும் விளங்கி இரைப் பணியோடு இறைப் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
இயற்கையின் தேடல்:-
வேளாண் குடியின் மரபுப்படி வயலுக்குச் சென்று மேற்பார்வையிட்டபோது வேலையாட்கள் மண்வெட்டியால் வயல் வரப்புகளை வெட்டி சீர் செய்து கொண்டிருக்கையில்
மண்ணுக்குள் புதைந்திருந்த மண்புழுக்கள் மண்வெட்டி பட்டு துண்டுகளாகித் துடிப்பதையும், அப் புழுக்களின் ஊணும், சதையும் பிதுங்கி வருவதையும் காண நேரிட்டது.
வேளாண் குடி மக்களுக்கு இந்த நிகழ்வு புதிதல்லவே! ஆனால் சுவாமிகளின் உள்ளத்தில் இரக்க சிந்தனை இதயத்துள் பல இரத்தக் கசிவுகளை உருவாக்கக் கனத்த இதயத்தோடு இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.
மனப்போராட்டம்:-
இருப்பினும், நெல்வயலில் கண்ட காட்சி சுவாமிகளை நெக்குருக வைத்து அதே நினைவுடனேயே மனம் போராட... உணவு உண்ணத் தோன்றாமலும் யாருடனும் பேசாமலும்.. தனிமையிலிருந்து.. பின்னர் தன் உற்றார், உறவினர்களையும் ஊர்ப் பொது மக்களையும் அழைத்துத் தாம் "இக்கணம் முதல் இல்லறத்தை விடுத்து துறவு மேற்கொள்ளப் போவதாக" அறிவித்து விட்டுத் தன் குடும்பப் பொறுப்புகளைத் தன் சகோதரர்களிடம் ஒப்புவித்துத் துறவு வாழ்வில் ஈடுபடத் துவங்கினார்.
தவவாழ்வு:-
தவவாழ்வில் தம்மை ஆழ்த்திக் கொண்ட சுவாமிகள் தனக்கு வேண்டிய உணவைத் தானே சமைத்துக் குழந்தைகள், பிராணிகள், பறவைகளுக்கு ஈந்து விட்டு எஞ்சியதைத் தாம் உண்டார்.
தவக்குடில்:-
தவ வாழ்வின் போது தெக்கூரில் உள்ள சிவன் கோவிலுக்கு நாள்தோறும் விடியலில் வந்து வழிபட்டு வந்தவர்.. கைலாசநாதர் கோயிலுக்கு முன்புறம் உள்ள திருக்குளத்தின் வடகரையில் தாம் தவமியற்றக் குடில் ஒன்றை அமைத்துத் தரும்படி ஊர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி ஊர்மக்களும் சுவாமிகள் கூறிய இடத்தில் 'தவக்குடில்' ஒன்றை அமைத்துத் தந்தனர்.
மிளகாய் சாந்து சித்தர்:-
சுவாமிகள் தவக்குடிலில் ஒரு மண்டலம் கடும் தவம் இயற்றினார்கள். தவக்காலம் முழுவதும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையையும், ஒரு கைப்பிடி அளவு அரைத்த மிளகாய் சாந்தையும் உணவாக அருந்தினார். இதனால் சுவாமிகளுக்கு எத்தீங்கும் நேராது வெண்ணை உண்ட பிரான் போன்று குளிர்ந்திருந்தார். இக்காரணம் கொண்டே சுவாமிகளை 'மிளகாய் சாந்து சித்தர்' என்று ஊர் மக்கள் சுவாமிகளை அழைத்தனர்.
சமாதி நிலை
48 நாட்கள் தவருசுவாமிகளதமககத சுவாமிகள் தாம் ஜீவசமாதி நிலை எய்தும் நாளைக் குறிப்பிட்டுத் தனது சமாதிக்காண இடத்தையும் தேர்வு செய்து அறிவித்தார். அதன்படி கார்த்திகை மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் சுவாமிகள் ஜீவ ஒடுக்கம் எய்தினார். மேலும் "தனது குடும்ப வாரிசுகள் யாரும் தமக்கு ஈமக் கிரியைகளைச் செய்ய வேண்டாம் என்றும், தன் உடலை ஜீவசமாதியில் அமர்த்த 9 சாதுக்கள் வருவார்கள் என்றும் கூறினார்".
சுவாமிகள் குறிப்பிட்டபடியே கார்த்திகை மாதத்தில் ஜீவ முக்தி அடைந்தார். சுவாமிகள் சொல்லியபடியே ஒன்பது துறவிகள் வந்திருந்து சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து சுவாமிகளின் சமாதி மீது சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்தனர்.
லொகேஷன்:https://goo.gl/maps/Q33v8tV828gFPiPr6
முகவரி:
ஸ்ரீ முத்திருளாண்டி சுவாமிகள் சித்தர் பீடம்
தெக்கூர்,சிவகங்கை
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:
Post a Comment