Friday, 6 November 2020

சத்தி நாயனார் குருபூஜை நாள்:07.11.2020

 சத்தி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர். 


 

பெயர்:சத்தி நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:ஐப்பசி பூசம்
அவதாரத் தலம்:வரிஞ்சையூர்
முக்தித் தலம்:வரிஞ்சையூர்     

 

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 
 
 

 

No comments:

Post a Comment