கார்த்திகை 02ஆம் நாள்:17.11.2020 செவ்வாய்கிழமை ஸ்ரீ அன்னை குருபூஜை விழா
வரலாறு:
மிரா அல்பாசா (Mirra Alfassa) (பெப்ரவரி 21, 1878 – நவம்பர் 17 1973) என்பவர் ஒரு ஆன்மிகவாதி ஆவார். இவரை நேசிப்பவர்களால் அன்னை (மதர்) எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சிறீ அரவிந்தருடன் இணைந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டார். அரவிந்தர் இவரை அம்மா என்ற பெயரிலேயே அழைத்தார். இவர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தினை புதுச்சேரியில் நிறுவினார். மேலும் ஆரோவில் எனும் நகரத்தினைத் தோற்றுவித்தார். இதன் மூலம் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி எழுத்தாளர்கள் மற்றும் குருக்கள் போன்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான உத்வேகத்தினையும், ஆர்வத்தினையும் இவர் ஏற்படுத்தினார்..
இவர் 1878 ஆம் ஆண்டில் பாரிசு மாநகரில் பிறந்தார். இவர் அறிய இயலா இயக்கம் பற்றி மேக்சு தியானிடம் கற்பதற்காக அல்சீரியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். இவரின் பெற்றோர்கள் துருக்கி, எகிப்து நாட்டினர். இவர் சிறீ அரவிந்தரை மார்ச் 20, 1914ல் புதுச்சேரியில் ஆர்யா என்னும் பத்திரிகையில் பணி புரியவும், தொகுப்புப் பணி செய்யவும் சந்தித்தார். பின் முதலாம் உலகப்போர் காரணமாக புதுச்சேரியை விட்டு ஜப்பான் நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். யப்பானில்ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூரை சந்தித்தார். 1920ல் அவர் மீண்டும் புதுச்சேரிக்கு வந்து வசித்தார். அதன் பின் நாடு திரும்பிய இவர் உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இறுதியில் அரவிந்தர் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுடன் தங்கினார் இந்தியாவில் உள்ள புதுச்சேரியில். இவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அங்கே இருந்த குடியிருப்பானது சில ஆண்டுகளில் ஆசிரமம் ஆனது. அங்கு அரவிந்தருடன் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி மக்களுக்குப் போதனை செய்தனர். அரவிந்தரின் இறப்பிற்குப் பின் ஆசிரமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். மேலும் சோதனை அடிப்படையில் ஆரோவில் எனும் தன்னாட்சி நகரத்தினைத் தோற்றுவித்தார். இந்த நகரத்தின் முக்கிய நோக்கம் இங்கு உள்ள மக்கள் தேசியம், மொழி, சமயம்,சாதி ஆகிய எந்த வேறுபாடுகளும் இன்றி இருப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இவர் நவம்பர் 17, 1973 இல் புதுச்சேரியில் இறந்தார்.
அல்பாசாவின் கடந்த முப்பது ஆண்டுகால வாக்கையினை பதின்மூன்று தொகுதிகளாக தொகுத்து தெ அஜண்டா எனும் நூலை இவரைப் பின்பற்றுபவரான சாட்பிரேம் என்பவர் எழுதியுள்ளார்.
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:
Post a Comment