Monday, 30 November 2020

ஸ்ரீ நைனார் சுவாமி 41வது குருபூஜை,04.12.2020

கார்த்திகை 19ஆம் நாள்:04.12.2020 வெள்ளிக்கிழமை 41வது குருபூஜை விழா  

 ஸ்ரீ நைனார் சுவாமி,மருந்துவாழ்மலை,பொற்றையடி,கன்னியாகுமாரி

முகவரி:
நைனார் சுவாமிகள் தர்மசாலா ட்ரஸ்ட்,
மருந்துவாழ்மலை,பொற்றையடி
கன்னியாகுமாரி  மாவட்டம்.

G. Jai Sivanandh - 80120 21844
M. Sri Lekha - 75029 66015

லொகேஷன்:https://goo.gl/maps/7wQUyTYvrXngyLbt5
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

பகவான் யோகி ராம்சுரத்குமார்,102வது அவதார விழா,01.12.2020

 கார்த்திகை 16ஆம் நாள்:01.12.2020 செவ்வாய்க்கிழமை 102வது
அவதார விழா
 

பகவான் யோகி ராம்சுரத்குமார்
 

 

 

வரலாறு:
                பகவான் யோகி ராம்சுரத்குமார் 1918-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி கங்கைக்கரையில் உள்ள நார்தரா எனும் சிறிய கிராமத்திலே அவதரித்தார். சின்னஞ்சிறு வயதிலிருந்தே கங்கையின் மீது விவரிக்க முடியாத பற்றுதலும் பாசமும் உண்டு பகவானுக்கு.

               கங்கைக்கரைக்கு வரும் ஞானிகளுடனான சந்திப்பும், அவர்களுக்கு இடையே நிகழ்ந்த விவாதங்களைச் செவிமடுத்ததால் உண்டான ஞானமும் யோகி ராம்சுரத்குமாருக்குள் ஆன்மிகத் தேடலை விதைத்தன.

               இயற்பெயர் ராம்சுரத்குன்வர். அவர்களது குடும்பம் விவசாயக் குடும்பம். ராம்சுரத்குன்வருக்கோ படித்துப் பட்டம் பெறுவதில் ஆர்வம் இருந்தது. திருமணத்துக்குப் பிறகும் காசி சர்வ கலாசாலையில் படிப்பைத் தொடர்ந்து பட்டப் படிப்பு முடித்தார்.அவரது கிராமத்திலேயே மகான் ஒருவர் இருந்தார். உள்ளூர் மக்கள் அவரிடம் சென்று ஆசியும் அறிவுரையும் பெற்றுவருவது வழக்கம்.

                   ஒருநாள் அவரிடம் சென்ற ராம்சுரத் குன்வர், கடவுளைப் பற்றிக் கேட்டார். ‘காசி விசுவநாதரைத் தரிசித்து வா’ என்று பதில் தந்தார் அந்த மகான். அதன்படியே காசிக்குச் சென்று விஸ்வநாதரை ஸ்பரிசித்து வணங்கினார் ராம்சுரத்குன்வர். அவருக்குள் ஆன்மிகம் குறித்தப் பெரும் மாறுதல் நடந்தது அப்போதுதான் பட்டப் படிப்பு ஆசிரியர் வேலையைப் பெற்றுத் தந்தது. பணிக்குச் சேர்ந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் மிகவும் சிதிலமுற்றுக் கிடந்தது.மராமத்து செய்வதற்கு நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை. பள்ளிக் கட்டடத்தை சீர்ப்படுத்தும் வரையிலும் விடுமுறை அறிவித்தார், ராம்சுரத்குன்வர். நிர்வாகம் ஆட்சேபித்தது. ஆனாலும், முடிவில் உறுதியாக இருந்தார் ராம்சுரத்குன்வர். நிறைவில் ஊர் மக்கள் சேர்ந்து முறையிட, மக்களும் நிர்வாகமும் சேர்ந்து ஒத்துழைக்க பள்ளிக்கூட கட்டடம் பொலிவுற்றது. குறிக்கோளில் வெற்றிபெற உண்மையும், உறுதியும், முனைப்பும் தேவை என்பதை அவருக்கு உணர்த்திய சம்பவம் இது.

                      ஆன்மிகத் தேடல் அதிகரித்த காலத்தில், விடுமுறை நாள்களில் தென்னகம் நோக்கிக் கிளம்பினார். அவரது இலக்கு திருவண்ணாமலை. ஆனால், பாதி வழியிலேயே பணமும் ரயில் பயணச் சீட்டும் தொலைந்து போயின. ரயிலிலிருந்து இறங்கியவர் அந்த ஊரிலிருந்த பள்ளிக்குச் சென்று, ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களிடம் தனது நிலையை விளக்கி, காசு சேகரித்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். திருவண்ணாமலையில் ரமண தரிசனம் கிடைத்தது. பாண்டிச்சேரியில் அரவிந்த தரிசனமும் சூட்சுமமாகக் கிடைத்தது.அடுத்த விடுமுறைக்கு அவர் வடக்கே சென்றிருந்தபோதுதான், ரமணரும் அரவிந்தரும் முக்தியடைந்த தகவல் கிடைத்தது அவருக்கு.  

                   ஒரு விடுமுறைப் பயணத்தின்போதுதான், மங்களூருக்கு அருகில், `கஞ்சன்காடு’ என்ற இடத்திலிருந்த மகான் பப்பா ராம்தாஸைத் தரிசித்தார். அவரது ஆசிரமத்தில் தங்கவும் செய்தார். அங்கே அவருக்கு பப்பா ராமதாஸ் மூலம் ராம நாம உபதேசம் கிடைத்தது.
சிறிது காலம் கழித்து மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே அவர் தங்கியிருந்தது ஒரு புன்னை மரத்தடியில். ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில், `யோகி ராம்சுரத்குமார்’ என்று மாறினார்.புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்துகொண்டிருந்த குதிரை விழுந்துவிட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதைக் கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார்.

                    பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தைச் செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தைத் தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒருமுறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள். ``இது எப்படி சாத்தியம்..?’’ என்று கேட்டார்கள். ‘`இந்தப் பெயரைச் சொன்னால் போதும்... எல்லாவற்றையும் கரையேற்றும்’’ என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகிறவராக அவர் அறியப்பட்டார்.

                            அவர் கையில் எப்போதும் வெப்பத்தைத் தணிக்க ஒரு விசிறி. உணவு வாங்க ஒரு கொட்டாங்கச்சி. கையிலே சிறு கோல். இவற்றைவைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று கூப்பிடுவதையே விரும்பினார்.`கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயரை எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார்’’ என்பார்.

                        யோகி ராம்சுரத்குமார்... 20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். எனினும், இன்றைக்கும் அவர் உலகமெங்கிலுமுள்ள பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது நற்செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார். திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும் உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.

முகவரி:
யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம்
1833/1, செங்கம் ரோடு
திருவண்ணாமலை - 606603
Phone: 04175-237567
Mobile: +91 94433 83557
E-mail: yrskttvm@gmail.com

லொகேஷன்:https://goo.gl/maps/yCTvYbp62s6rcasX8

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 
 
 
                        

.


ஸ்ரீ தலைவிரித்த சுவாமி,பெளர்ணமி பூஜை,29.11.2020

ஸ்ரீ தலைவிரித்த சுவாமி, தலைவிரித்தான் சந்து,சென்னை சில்க்ஸ் அருகில்,பெரியார்,மதுரை

பெளர்ணமி பூஜை நடைபெற்றது.நாள்:29.11.2020  



 

லொகேஷன்:https://goo.gl/maps/1gYSUQa1jW9JcEWK7

---------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Sunday, 29 November 2020

ஸ்ரீ சக்தி வடிவேல்,கைலாச,திருவாலிமுத்துசாமி,தெற்கு மேடு

 

ஸ்ரீ சக்தி வடிவேல் சாமி,ஸ்ரீ கைலாச சாமி,ஸ்ரீ திருவாலிமுத்துசாமி,தெற்கு மேடு,புளியரை, செங்கோட்டை,தென்காசி மாவட்டம்


----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 
 
 

ஸ்ரீ ஒத்த வேட்டி சுவாமி,பெளர்ணமி பூஜை,29.11.2020

ஸ்ரீ ஒத்த வேட்டி சுவாமி,படிகட்டுதுறை,கரூர்

 



 

பெளர்ணமி பூஜை நடைபெற்றது.நாள்:29.11.2020  

லொகேஷன்:https://goo.gl/maps/eq9DHLaK4Tyd1B2m6
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ இலஞ்சி குருநாதர் சுவாமி,பெளர்ணமி பூஜை,29.11.2020

ஸ்ரீ இலஞ்சி குருநாதர் சுவாமி,சிவகாமிபுரம் தெரு,அம்பலப்புளி
பஜார் அருகில்,ராஜபாளையம்,விருதுநகர் மாவட்டம்
பெளர்ணமி பூஜை நாள்:29.11.2020    




லொகேஷன்:https://goo.gl/maps/t9PKdXChrzRbojmn6
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575


Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

 
Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

 
Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீப ஒளி,29.11.2020

மதுரையில் கார்த்திகை தீபத்திருவிழா !!
சொக்கனுக்கு ஏற்ற படும் சொக்கபனை !!


 









 

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் சைவ ஸ்தாபித வரலாற்று லீலை     
நாள்:29.11.2020
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஆனாய நாயனார் குருபூஜை,08.12.2020

கார்த்திகை 23ஆம் நாள்:08.12.2020 செவ்வாய்க்கிழமை குருபூஜை விழா  

ஆனாய நாயனார்


பெயர்:ஆனாய நாயனார்
குலம்:இடையர்
பூசை நாள்:கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம்:திருமங்கலம்
முக்தித் தலம்:திருமங்கலம்

 வரலாறு:

                    சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.

                        இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார். சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டுருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றிற்று. தோன்றவே அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார், நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்தவைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார். அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.

                       மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்தணைந்தன (வந்து சேர்ந்தன). ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள் மலையில் வாழ் அரசமகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள் – தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர். நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகி நயத்தலினால் பாம்பும், மயிலும், சிங்கமும், யானையும், புலியும் மானும் என்றித் திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின. காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.

                                ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.      
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ அன்னை நீலம்மையார்,49வது குருபூஜை,01.12.2020

கார்த்திகை 16ஆம் நாள்:01.12.2020 செவ்வாய்க்கிழமை 49வது
குருபூஜை விழா  

 

 

ஸ்ரீ அன்னை நீலம்மையார்,கிழக்கு மாட வீதி,யமுனா நகர், திருமுல்லைவாயில், சென்னை
 
லொகேஷன்:https://goo.gl/maps/Qb1vuGQoXp48ESSB7     
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ மஹான் உறிகட்டி சுவாமி,114வது குருபூஜை,01.12.2020

கார்த்திகை 16ஆம் நாள்:01.12.2020 செவ்வாய்க்கிழமை 114வது
குருபூஜை விழா  


 

  

ஸ்ரீ மஹான் உறிகட்டி சுவாமி,ஷேத்திரபாலபுரம்,குத்தாலம் வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம்  
     
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ அழுக்கு சித்தர்,101வது குருபூஜை,01.12.2020

கார்த்திகை 16ஆம் நாள்:01.12.2020 செவ்வாய்க்கிழமை 101வது குருபூஜை விழா  

 


ஸ்ரீ அழுக்கு சித்தர்,வேட்டைக்காரன்புதூர்,பொள்ளாச்சி,கோவை மாவட்டம்

லொகேஷன்:https://goo.gl/maps/vpuT2Zw9qUBhN6EUA

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Saturday, 28 November 2020

திருமங்கையாழ்வார் குருபூஜை,29.11.2020

கார்த்திகை 14ஆம் நாள்:29.11.2020 ஞாயிற்றுக்கிழமை திருமங்கையாழ்வார் குருபூஜை விழா  



                                  திருமங்கையாழ்வார்  சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். சோழ முத்தரையர் மன்னர்கள் மற்றும் பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று வரலாறுகூற்று எடுத்துரைக்கிறது.

ஆழ்வாரின் பிறப்பு :
                                      நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் அவதரித்தவர். இவர் அரசகுல மரபினரான முத்தரையர் வம்சவழியில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகளுடன் விளங்கினார். தந்தைக்குப் பின் தமது சோழ முத்தரையர் மரபு மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக முத்தரைய சோழ மன்னன் இவரைத் திருமங்கை நாடு என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.
ஆழ்வார்களிலேயே மிகவும் சிறப்புடையவர் திருமங்கை மன்னன். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன.

திருமங்கை மன்னரும் (வைணவ) காதலும் :

                                       குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்ய எண்ணினார். இதனால் திருடன் வேடம்தரித்து செல்வந்தரிடம் கள்ளனாக களவாடினார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.

திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை வரலாறு :

                                          திருமாலின் சார்ங்கம் என்ற வில் - அம்சமாக பிறந்தவர். அரசகுடி மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த சோழ மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், தம் மரபு என்பதால் திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார்.

                                          விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. பேரரசின் வழக்கமாக  கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். அவமதித்ததாக எண்ணி கோபமடைந்த முத்தரையச்சோழ மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மேலும் தமது ஆழ்வாரின் வீரத்தை பரிசோதிக்க எண்ணி சோழ மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களுக்கு எதிராக வாள்ஏந்தி நின்றார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த சோழநாட்டு முத்தரையர் மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை அரசமரபு வாக்கு தவறியதால் என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார்.

                                            சோழ மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். தமது சோழ மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மக்கள் நலனுக்கான சோழ பேரரசுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த சோழ மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார்.

                                            ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.
வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு பெருமாிடம் சரணடைந்தார். மன்னன் ஆழ்வார் அவரது இறைப்பணி மற்றும் எந்நிலையிலும் கைவிடாத பக்தியும் எம்பெருமானின் மனதையும் வருடிய கள்வனாக நீங்கா புகழுடன் நிலைத்து போற்றப்படுகிறார்.

                                               பெருமாளின் 108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46.

1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
2. திருமயம் (அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)
6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)
21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்)
36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)
37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)
40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)
46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி.
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ பொன்னம்பல சுவாமி,84வது குருபூஜை,30.11.2020

கார்த்திகை 15ஆம் நாள்:30.11.2020 திங்கள்கிழமை 84வது குருபூஜை விழா

 


ஸ்ரீ பொன்னம்பல சுவாமி,பழையவாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம்

---------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

சிவானந்த பரமஹம்சர்,ஜென்ம தின விழா,29.11.2020

கார்த்திகை 14ஆம் நாள்:29.11.2020 ஞாயிற்றுக்கிழமை ஜென்ம தின விழா  



 


 


சுவாமி சிவானந்த பரமஹம்சர்,வடகரை,கேரளா

லொகேஷன்:https://goo.gl/maps/YYuizttAbYHoYz6V7
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Friday, 27 November 2020

ஸ்ரீ சங்கரநாராயன & தக்ஷணாமூர்த்தி சுவாமி,குருபூஜை,09.12.2020,13.12.2020

கார்த்திகை 24ஆம் நாள்:09.12.2020 புதன்கிழமை 185வது குருபூஜை விழா  

  




 

ஸ்ரீ சங்கரநாராயன சுவாமி,பனையூர்,கரிவலம்வந்தநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்
 
கார்த்திகை 28ஆம் நாள்:13.12.2020 ஞாயிற்றுக்கிழமை 130வது குருபூஜை விழா  

ஸ்ரீ தக்ஷணாமூர்த்தி சுவாமி,பனையூர்,கரிவலம்வந்தநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்

தொடர்புக்கு:98652 83268  

லொகேஷன்:https://goo.gl/maps/F1N22ybCGztWiwBT9

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி,கும்பாபிஷேகம்,30.11.2020

கார்த்திகை 15ஆம் நாள்:30.11.2020 திங்கள்கிழமை கும்பாபிஷேகம்

ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி,உச்சப்பட்டி,மதுரை   





 

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 


Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமி,பிரதோஷ பூஜை,27.11.2020

ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண சுவாமி,கசவனம்பட்டி,திண்டுக்கல் மாவட்டம்  
பிரதோஷ பூஜை நடைபெற்றது நாள்:27.11.2020


























 

தொடர்புக்கு:97876 18855

லொகேஷன்:https://goo.gl/maps/T7pHRUtvTerPut3M8
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg