Friday, 6 August 2021

ராஜரிஷி ராமபாண்டிய சுவாமி வரலாறு

ராஜரிஷி ராமபாண்டிய சுவாமி,நெல்கட்டும்செவல்,காட்டுபுரம்,தென்காசி மாவட்டம்                        

 

 


 

வரலாறு:
                         நெல்கட்டும்செவல் ஜமீன்தாரை பற்றி பலரும் அறிந்திருக்கலாம். அவர் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட மன்னர். ஆனால் அவரது வாரிசுதாரர் ஒருவர் சித்தராக வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தி எத்தனை பேருக்கு தெரியும்.

                         18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த வரலாறு இது. நெல்கட்டும் செவல் பாளையத்தின் ராணி, கோமதிமுத்து நாச்சியார். ராணியின் கணவர் ராமர் பாண்டியன், ஒரு வித்தியாசமான மனிதர். கோமதிமுத்து நாச்சியாருடன் குடும்ப வாழ்க்கை நடத்தும் போதே, ராமர் பாண்டியனின் மனம் துறவு வாழ்க்கையை நாடிச் சென்றது. தம்பதிகளின் ஐந்து வருட இல்லற வாழ்க்கையில் ஆண் குழந்தை பிறந்தது. அதுவும் கொடி சுற்றிப் பிறந்தது. கொடி சுற்றிப்பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது.

                           குறிப்பாக தாய்மாமனுக்கு ஆகாது என்று அரண்மனை ஜோதிடர்கள் கூறிவிட்டார்கள். திகைத்தார் கோமதிமுத்து நாச்சியார். குழந்தைக்கு அமுது கொடுக்காமலும் கவனிக்காமலும் விட்டு விட்டார். குழந்தை இறந்துவிட்டது. மனமுடைந்தார் ராமர் பாண்டியன். அவரால் அரண்மனையில் இருக்க முடியவில்லை. கால்போன போக்கில் நடந்தார். கண்காணாத தேசத்துக்கு சென்றுவிட்டார்.

                           கணவனைக் காணாத கோமதிமுத்து நாச்சியார், கவலையில் மூழ்கினார். தந்தை புலித்தேவர், சகோதரர்கள் சித்திர புத்திரதேவர், சிவஞான பாண்டியன் ஆகியோர் ஆரம்ப காலகட்டத்தில் ஆதரவு தந்தனர். தந்தையும், சகோதரர்களும் மரணமடைந்து விட்ட பின்னர்தான், தானே ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை வந்து விட்டது. தனது ஆட்சிக்கு துணையாக ராமர் பாண்டியனை எட்டு திக்கும் தேடினார்கள். அரண்மனையைச் சேர்ந்த சங்கு முத்துப்பிள்ளை என்பவர் அவரை தேடி அலைந்து கொண்டிருந்தார்.

                           திருவாவடுதுறை ஆதினத்தில் ஒருவர் ஆன்மிகத்தில் மூழ்கி வழிபாடுகளில் தினமும் கலந்து கொண்டார். நந்தவனத்தைப் பராமரிக்கும் தோட்டக்காரனாக பணிபுரிந்தார். அவர்தான் ராமர் பாண்டியன். அங்கு தன்னை அரசனாக அவர் காட்டிக் கொள்ளவில்லை. காவி உடையில் காட்சியளித்தார்.

                           திருவாவடுதுறையின் 11-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வாழ்ந்த காலம் அது. சின்னப்பட்டம் திருச்சிற்றம்பலம் தேசிகர், சன்னிதானத்துக்கு நெல்கட்டும் செவல் ராணியிடம் இருந்து திருமுக ஓலை வந்திருப்பதாகச் சொல்கிறார். ஒடுக்கம் சாமிநாத தம்பிரான் அதை வாங்கி படிக்கிறார். 'குருமகாசன்னிதானம் அவர்களே.. நமது திருமடத்தில் நெல்கட்டும் செவல் அரண்மனையை அலங்கரிக்கும் ராமர் பாண்டியன் நான்கு வருடமாக இருக்கிறாராம். அவரை அரண்மனைக்கு அனுப்ப வேண்டும் என மகாராணி ஓலை அனுப்பியுள்ளார்'.

                           ஆச்சரியப்பட்ட சன்னிதானம் உடனடியாக தம்பிரானிடம், 'திருமடத்தின் சத்திரத்தில் தங்கியிருக்கும் காஷாயம் வாங்காத துறவிகள் கூட்டத்தில் உடனடியாக விசாரியுங்கள்' என்றார். ஓலை கொண்டு வந்த சங்கு முத்துப்பிள்ளை பாண்டியனை அடையாளம் காட்டினார். சன்னிதானத்தின் பாதங்களில் முறைப்படி விழுந்து நமஸ்கரித்த ராமர்பாண்டியன், அவர் முன்பு கைக்கட்டி வாய் மூடி நின்றார்.

                           'நான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் ஆதினத்தில் இருந்தமைக்கு சன்னிதானம் அடியேனை மன்னிக்க வேண்டும்' என மன்னிப்புக் கேட்டார்.'மன்னிப்பா! ராஜ வாழ்க்கை வாழக்கூடிய ஒருவர், துறவு வாழ்க்கையில் இங்கு அமர்ந்து எடுபிடி வேலையெல்லாம் செய்திருக்கிறார் என்றால், நீர்.. எவ்வளவு பெரிய தத்துவ ஞானி.

                          ஆனாலும் ஆட்சி பொறுப்பை விட்டு துறவி பொறுப்பை ஏற்க முடியுமா..? 'ராமர் பாண்டியரே! நீர்.. உடனே சென்று நெல்கட்டும் செவல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்றார். மனதளவில் துறவியான அடியேனால் இனி உலக வாழ்க்கையில் எப்படி ஈடுபட முடியும்? ராமர் பாண்டியன் கண் கலங்கினார்.

                          எதற்கும் மனம் கலங்க வேண்டாம் ராமர் பாண்டியனே. இன்றே இப்போதே நீர் நெல்கட்டும் செவல் மன்னராகிவிட்டீர். அதுவும், திருவாவடுதுறையில் இருந்து செல்கின்ற நீர் 'ராஜரிஷி' என்று அழைக்கப்படுவீர். உம்மை அங்குள்ள குடிமக்கள் போற்றுவார்கள்' என்று கூறி, மிகவும் சிறப்பான பட்டு சால்வையை எடுத்து ராமர் பாண்டியனுக்கு போர்த்தினார். அதன் பின் சங்கு முத்துப்பிள்ளை கொண்டு வந்திருந்த பல்லக்கில் ஏறி புறப்பட்டார், ராமர் பாண்டியன்.

                           பல்லக்கு அரண்மனையை வந்தடைந்தது. மக்கள் குதூகலம் அடைந்தனர். ராஜரிஷியாக வந்திருக்கின்ற மகராஜாவை பார்க்க ஓடிவந்தனர். ராமர் பாண்டியன், தன் கழுத்தில் உத்திராட்சம் அணிந்திருந்தார்.

                           சன்னிதானம் அளித்த பட்டாடையால் உடம்பைப் போர்த்தியிருந்தார். ராணி கோமதிமுத்து நாச்சியாரோ, ராஜ சின்னங்கள் அனைத்தையும், உடைவாளுடன் அவர் பாதங்களில் சமர்ப்பித்தார். 'ராமர் பாண்டிய மகராஜா வாழ்க' என்ற மக்கள் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெல்கட்டும் செவல் ராஜாவானார், ராமர் பாண்டியன்.

                           சில ஆண்டுகளே அவர் ராஜாவாக இருந்தார். ஆனாலும் அவரின் மனமோ ராஜாவாக இருக்க அவரை விடவில்லை. அவரின் ஆன்மிக நாட்டம் அனைவரையும் வியக்க வைத்தது. தன்னுடைய ஆட்சிக்கு உள்பட்ட பல நிலபுலன்களை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு எழுதி வைத்தார். உதயமார்த்தாண்ட பூஜை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

                           பல கோவில் திருப்பணிகளைத் தொடர்ந்தார். தான, தர்மங்களைச் செய்தார். தன்னுடைய குடிகளும் படை வீரர்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் குறைவில்லாமல் செய்து கொடுத்தார்.

                           தான் ஜீவ சமாதி ஆவதற்காக, நெல்கட்டும் செவலுக்கு வடக்கே நிஷோப நதிக்கரையில் மூன்று நீர் நிலைகள் ஒன்று சேரும் இடத்தைத் தேர்வு செய்தார். நாள்தோறும் அங்கு வந்து அமர்ந்து வெகுநேரம் தவம் செய்ய ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட நாள் வந்தது. அவரே கட்டிய சமாதியில் நிஷ்டையில் இருந்தபடியே ஜீவ சமாதி அடைந்தார்.

                          ஊர் மக்கள் இங்கு கோவில் அமைத்தனர். இந்தக் கோவிலில் உருவம் எதுவும் இல்லை. சமாதியில் ஆறு அடிக்கு அதிகமான உயரத்தில் ஒரு புற்று வளர்ந்திருக்கிறது. அந்த புற்றில் முகம் போன்ற அமைப்பு உள்ளது. இந்த புற்று மண் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்பது அந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

                           ராமர் பாண்டியன் ஜீவசமாதி உயிரோட்டம் கொண்டது. எனவேதான் இந்த புற்று மிக வேகமாக வளர்கிறது. இதன் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே புற்றில் ஈரத்துணியை நனைத்து போட்டு வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் முடியவில்லை. இறுதியில் ராமர் பாண்டியனிடம் விரும்பி வேண்டி தலையில் கவசம் ஒன்றை வைத்தனர். ஓரளவு புற்றின் வளர்ச்சி தடைபட்டது. ஆனால் அவர் வழங்கும் அருள் ஆசியை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை.

                           மடத்தில் இருந்து அரண்மனைக்கு வரும் போதே பல அற்புதங்களை செய்ய ஆரம்பித்தார் ராஜரிஷி. வழியில் பல்லக்கு தூக்கிகளுக்கு தாகம் எடுத்தது. உடனே பல்லக்கை நிறுத்த இடம் தேடினர். ஆனால், ராமர் பாண்டியனோ, 'நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள். பல்லக்கு அந்தரத்தில் நிற்கும்' என்று கூறினார். அவர்களும் பல்லக்கை அப்படியே விட்டு விட்டுச் சென்றனர்.

                           என்ன ஆச்சரியம்! பல்லக்கு அப்படியே அந்தரத்தில் நின்றது. பின் அவர்கள் நால்வரும் தண்ணீர் குடிக்க அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றனர். அங்கு மந்திரம் தெரிந்த பெண் ஒருத்தி நின்றாள். அவள் பல்லக்கு அந்தரத்தில் நிற்பதைப் பார்த்தாள். 'எவரோ ஒருவர் தன் எல்லைக்குள் வந்து வித்தை காட்டுகிறாரே' என்று நினைத்தவள் தானும் பதிலுக்கு வித்தை காட்ட ஆரம்பித்தாள்.

                           அதன்படி தண்ணீரை கை நீட்டி குடித்த பல்லக்கு தூக்கிகள் நால்வர் கையும், அப்படியே ஒட்டிக்கொண்டது. அதை பிரிக்க முடியவில்லை. உடனே, அவர்கள் ராமர் பாண்டியனை நோக்கி ஓடி வந்தனர். ராமர் பாண்டியன் கோபத்துடன் தனது கையில் கிடந்த கடத்தினை தூக்கி நிறுத்தி, மந்திரவாதி பெண்ணை நோக்கி தனது தவ வலிமையைக் காட்டினார்.

                           அப்போது சூறாவளி போன்று காற்று அடித்தது. அந்தக் காற்று அந்தப் பெண்ணைத் தரையில் நிற்கவிடாமல் தூக்கியது. இதனால் பயந்து போன அந்தப் பெண் மந்திரவாதி, ராமர் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, அந்த நால்வரின் கையை பிரித்து விட்டுவிட்டார்.

                         நிட்சோப நதிக்கரையில் ராமர்பாண்டியன் ஜீவசமாதி ஆலயம் உள்ளது. தீராத நோய் என்று மருத்துவர்கள் கைவிட்டவர்கள் கூட, இங்கு வந்து தங்கி நோய் தீர்ந்து செல்கின்றனர்.

முகவரி:
ராஜரிஷி ராமபாண்டிய சுவாமி ஆலயம்,
நெல்கட்டும்செவல்,காட்டுபுரம்,
தென்காசி மாவட்டம்.  

 
லொகேஷன்:https://goo.gl/maps/x9Vvi3TaT4EyoLmT7

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 
 
 

Sunday, 30 May 2021

ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி வரலாறு

ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி,காரைதீவு,இலங்கை


 


 

வரலாறு:
                           சித்தானைக்குட்டி அவர்கள் இந்தியாவின் இராமநாதபுரத்தின் சிற்றரசரின் மகனாக அவதரித்தார். இவரது இளமைப் பெயர் ‘கோவிந்தசாமி’ ஆகும். இவ்ராச்சியத்தில் ஏற்பட்ட பயங்கரத் தொற்று நோயினால் தனியாகவும், குடும்பத்துடனும் பலர் மாண்டனர். இக்கால கட்டத்தில் இரு மகான்கள் நோயினை தாமே ஏற்று பணியாற்றலாயினர். இப்புதுமையினை அறிந்த சிற்றரசன் மகான்களை அழைத்து உபசாரம் செய்ய எண்ணம் கொண்டு, தனது மகனிடம் மகான்களை அழைத்து வருமாறு பணித்தான். தந்தையின் பணிப்பினை ஏற்று உடன் புறப்பட்ட கோவிந்தசாமி இல்லமெல்லாம் தேடி அலைந்து ஒர் குடிசையில் கண்டு இருவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி நின்றார்.

                          மகான்கள் கோவிந்தசாமியை கட்டியணைத்து ஆசி வழங்கினர். உள்ளம் துறவறத்தினை நாடியதால் மகான்களுடன் இணைந்து நோயுற்ற மக்களுக்கு பணியாற்றலானார்.
பூர்வீகத்தொடர்பு ஈழம் நோக்கி ஈர்ந்திழுக்க தூத்துக்குடி சென்று கப்பலில் வருவதற்கான சீட்டினைப் பெறுவதற்கு அன்பர் ஒருவரை அனுப்பி வைத்தனர். இருவருக்கு மட்டுமே பிரயாணச் சீட்டு கிடைத்ததினால் கோவிந்தசாமியை அக்கரையில் விட்டுவிட்டு இரு மகான்களும் கப்பல் ஏறி கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த போது கூடிநின்ற மக்கள் கூட்டத்தினுள் கோவிந்தசாமி நிற்பதை கண்ணுற்று தங்கள் சீடனிடம் பொதிந்திருந்த பக்குவ நிலையினை முன்னரே உணர்ந்திருந்ததினால் ஆச்சரியத்தினை காட்டிக் கொள்ளவில்லை. இச்செய்கை மூலம் சித்தராக பரிணமித்தார்கள்.

                           1920இன் முற்பகுதியிலிருந்து ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம் நடமாடித்திருந்து பித்தனாகவும், பேயனாகவும், கேலி பண்ணுவதற்குரியவராகவும் தன்னை வெளிக்காட்டி, உள்ளன்புடன் தன்னை நாடிவரும் அன்பர்களின் மனோநிலைக் கேற்ப அருளுரைகள், அற்புதங்கள் மூலம் மக்களை வழி நடத்தியவர் ஜீவ சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆகும். சுவாமிகள் காரைதீவில் தனக்கென ஆச்சிரமம் அமைத்து தங்கியிருந்தார்கள். நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் சுவாமிகளை தரிசிப்பதற்கு வருபவர்கள் ‘காவு’களில் உணவுப் பொருட்களையும், பிரியமான பண்டங்களையும் காணிக் கையாக வழங்குவார்கள். அவை அனைத்தும் தன்னை நாடிவரும் அடியார்கக்;கு பகிர்ந்தளிப்பார்கள்.

                           சுவாமி அவர்கள் ஆடாதசித்தே இல்லை என்கின்ற அளவிற்கு பல இடங்களில் தனது சித்து விளையாட்டை ஆடியிருக்கின்றார்கள். அவற்றுள் சில ‘கதிர்காமத்தில் முருகப்பெருமானல் அமிர்தத்துளி கிடைக்கப் பெற்றமை, சாண்டோ சங்கரதாஸை இரும்பரசனாக புகழ் ப+க்கச்செய்தமை, கடலின் மேலால் நடந்த அதிசயம், கல்முனை சந்தியிலிருந்து கதிர்காமத்தில் தீப்பிடித்த திரைச்சீலையை அணைத்த பெருந்தகை, கதிர்காமத் திருவிழாக் காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்த மகான்,

                          நஞ்சு ஊட்டப்பட்டும், தீயிட்டு எரித்த போதும் மீண்டும் எழுந்து நின்று சித்தாடிய சித்தர் அவர்கள் ‘1951ஆம் ஆண்டு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி நிலையை எய்தினார்கள்’. இச்செய்தியினை கேள்வியுற்ற பக்த அடியார்கள் நாலா திசைகளிலிருந்தும் காரைதீவு ஆச்சிரமத்தில் ஒன்று கூடினர். ‘சித்தர் சேவா சங்கம்’ அமைக்கப்பட்டு சமாதி வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.

                          தான் சமாதியான பின் ‘தனது அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகு’மென்றும் அதன் பின்னரே சமாதி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே சுவாமி அவர்கள் கூறியிருந்தார்கள். சுவாமி அவர்கள் கூறியிருந்ததிற்கமைய மூன்றாம் நாள் அடி வயிற்றிலிருந்து இரத்தம் பெருகியது. ஒரு யார் கன பரிமாணத்தில் குழியமைத்து நான்காம் நாள் பக்தர்களின் ஆராதனையுடன் சுவாமி அவர்கள் ‘சமாதி’ வைக்கப்பட்டார்.

                            பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையினரால் சமாதி ஆலயம் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இச்சபை வருடாவருடம் மீளமைக்கப்படுவது வழமையாகும். 1985, 1987, 1990 காலப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவ்வாலயம் சேதமாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தால் அன்னதானமடம், காளியம்மன், முருகன், பிள்ளையார் ஆலயங்கள் உட்பட சுற்றுமதில், அசைவுள்ள அனைத்து உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டது. தற்பொழுது இவ்வாலயம் பொதுமக்களின் பங்களிப்புடனும், இந்து கலாசார அமைச்சின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

முகவரி:
ஶ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி,
காரைதீவு,இலங்கை   

லொகேஷன்:https://goo.gl/maps/izzv3VCFYvsZ4KHg6

வெப்சைட்:http://siththar.karaitivu.org/   
                    
------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Saturday, 29 May 2021

ஸ்ரீ தேவி மாயம்மா வரலாறு

ஸ்ரீ தேவி மாயம்மா,சட்டக் கல்லூரி,சாந்திநகர், சின்னகொல்லபட்டி, சேலம்.

 

 


 வரலாறு:
                          1920ல் இருந்து மாயம்மா இந்தியாவின் தென் பகுதியான குமரி முனையில்  எழில் கொஞ்சும் கடல்களின் அருகில் தன் வசிப்பிடமாகக் கொண்டார்.  அவரை ஒரு சாதாரண மனுஷியாக கூட கவனிக்கப்படாத நிலையில் இருந்தார்.  வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட  பேசியதில்லை ஏதாவது ஒரு வித்தியாசமான குரல் எழுப்பி தன்னுடைய கருத்தை தெரிவிப்பார்.  திடீரென்று கடலில் நடப்பார் , திடீரென்று  கடலில் மூழ்கி கடற்பாசி போன்றவைகளை எடுத்துக் கொண்டு கரை சேர்ப்பார். திடீரென்று தோன்றி மாயமாக கடலில் சென்று வருவதால் கன்னியாகுமரி மக்கள் அந்த அம்மையாரை ' மாயம்மா' என்று அழைத்தனர்.

                          அருகில் இருக்க கூடிய வாழை மட்டையை வைத்து அந்த கடற்பாசியை , மேலே சூரியனை கையால் காண்பித்து நெருப்பை பற்ற வைப்பார்.  எப்படி ஓர் அபரிதமான சக்தி இருந்தால், ஈரமான கடல்பாசியை வாழ மட்டையுடன்  சூரியனிலிருந்து நெருப்பு மூட்டி பற்ற வைத்திருப்பார் . இதைபார்த்தால் ஒரு யாகம் வளர்ப்பது போல் காட்சியளிக்கும் . அப்போது அவர் வாய் ஏதோ முணுமுணுக்கும்.
 பல சமயம் கப்பல்களில் சென்ற மீனவர்கள் கடல் நடுவே சிக்கி ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்.   கடலில்  நீந்தி அவர்களை மீட்டு கரை சேர்ப்பார் . இதை அறியும்போது,  சம்சாரம் எனும் கடலில் நீந்தி கரை காண முடியாத நம்மை கரை சேர்க்கவே  மாயம்மா எனும் சித்த புருஷனி தோன்றியதாக  மனதிற்குபட்டது.

                           ஒரு நாள் , கன்னியாகுமரி சாலையில் உலாவிக் கொண்டிருந்த நாய் மீது சுற்றுலா பேருந்து  மோதி விட்டது. நாயின் குடல் வெளியே வந்து, அதை பார்த்து பரிதாபப்பட்ட மக்களுக்கு நடுவே மாயம்மா சென்று அந்த நாயின் குடலை உள்ளே வைத்து அருகில் இருந்த குச்சியை எடுத்து தையல் போட்டு , அங்கே இருக்கும் மணலை அள்ளி அதன் தோலின் மீது பூசிவிட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த நாய் எழுந்து துள்ளிக் குதித்து ஓடியது . இதை கண்ணுற்ற மக்கள் மாயம்மாவின்  சக்தியை புரிந்து அவரை ஒரு சித்தராக பார்க்கத் தொடங்கினர்.

                          அவரால் காப்பாற்றப்பட்ட நாய் அவருடனே தங்க தொடங்கியது. அதன் முதல் கொண்டு பல நாய்களும் அவரை சுற்றி சுற்றி வரத் தொடங்கியது . அவரை 'பைரவ சித்தர்' ஆகவே பலர் பார்க்க தொடங்கினர். யாரேனும் மாயம்மாவிற்கு உணவு கொடுத்தால், அதை   நாய்களுக்கு பகிர்ந்து விட்டு பின்பு தான் உண்பார், அருகில் இருப்போருக்கும் ஊட்டி விடுவார். அவர் எந்தக் கடைகளில் உணவு வாங்கி உண்டாலும் அந்த கடையில் வியாபாரம் அந்த நாள் முதற்கொண்டு விருத்தியாகும்.  

                          மாயம்மா காலத்தில் வாழ்ந்த பல சாதுக்களும், யோகிகளும் மாயம்மாவின் தவ சக்தியையும் , அற்புதங்களையும் அறிந்துள்ளனர். அவர்களில் பூண்டி சுவாமியும் , திருக்கோவிலூர்  ஞானானந்தகிரி ஸ்வாமிகள், யோகிராம்சுரத்குமார்  போன்றோர் தன்னுடைய சீடர்களை மாயம்மாவின் தரிசனத்திற்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.   கன்னியாகுமரியின் நடமாடும் தெய்வமாகவே மாயம்மாவை இவர்கள் பார்த்திருக்கின்றனர்.

                           ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் சிஷ்யை பராசக்தியின் தரிசனம் பெற விரும்பினார். எனவே அவரை கன்யாகுமரியிலுள்ள ஆலையங்களுக்கு சென்று தரிசனம் செய்ய பனித்தார். அவருக்கு பிராப்தம் இருந்தால், பராசக்தியின் தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அப்பக்தையும் கன்யாகுமரி சென்று கோயில் தரிசனம் செய்து விட்டு பராசக்தியின் தரிசனம் கிடைக்காத மனநிலையில் ஊர் திரும்பினார்.

                           தன்னுடைய குருவிடம் இதைப் பற்றி கூறினார். அதற்கு ஞானானந்த கிரி ஸ்வாமிகள் "பெண்ணே நீ பராசக்தியின் தரிசனத்தை பெற்று, அவளே உனக்கு உணவை ஊட்டிவிட்டார், ஆனால் அதை நீ தட்டிவிட்டாய். பராசக்தியை உன்னால் உணர முடியவில்லை" என்று கூறினார்.

                           அப்பொழுது தான் அந்தப்பெண்ணிற்கு நினைவு வந்தது. கோவிலுக்கு சென்று விட்டு கடற்கரையில் நின்றிருந்த மாயம்மா அருகில் இருப்போருக்கும் நாய்க்கும் உணவை ஊட்டிவிட்டார்.  அப்போது அங்கிருந்த அந்த பெண்மணிக்கும் ஊட்ட, அதை அவர் தட்டிவிட்டார். அதை நினைவு படுத்தி வருந்தினார். அதற்கு ஸ்வாமிகள் மாயம்மாவே பராசக்தியின் வடிவம் என்று கூறினார்.
 திரு ராஜேந்திரன் என்பவர் வடலூர் வள்ளலாரின் அதி தீவிர பக்தராக இருந்தவர். ஒருமுறை மாயம்மாவை கடற்கரையில் கண்டு அவரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து. அவரை சித்த புருஷனியாகவே  ஏற்றுக்கொண்டு அவருக்கு பணிவிடை செய்துள்ளார்.   அவருடனே எங்கும் செல்ல தொடங்கினார்.

                          திரு ராஜேந்திரன் அவர்கள் மாயம்மாவை காரில் ஏற்றி ஒவ்வொரு ஊராக சென்றுள்ளார்.  சேலம் வந்தவர் அங்கேயே தங்கி விட்டார். சேலம் ஏற்காடு அடிவாரத்தில் குடில் அமைத்து அங்கே தன்னுடைய இருப்பிடமாக  இருக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சேர்வராயன் மக்கள் அவரை ஏற்காமல் அந்த வருடத்திற்கான மழை பொழியாததற்கு  மாயம்மா அங்கு வந்ததே காரணம் என்று கூறினர்.  ஆனால் அதைப் புன்னகையுடன் எதிர்கொண்டு  அன்று இரவு மழை பெய்யப் போவதாக குறிப்பால் உணர்த்தினார்.  அதுபோலவே அன்று இரவு விடிய விடிய  ஒரு வருடத்திற்கான மழை பெய்து அனைவரையும் மனம் குளிரச் செய்தது.  அங்கிருக்கிற மக்களும் அவரின் மகத்துவத்தை புரிந்து கொண்டனர்.

                          9-2-1992 நாளன்று தான் தன்னுடைய சமாதி நாளாக செய்ய முடிவு செய்து , அன்று மாலை 16:20 அளவில் இந்த ஸ்தூல உடம்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.  ஏராளமான மக்கள் தங்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக  ஜீவசமாதியை  நாடுகிறார்கள் . கேட்டவருக்கு கேட்ட வரம் வழங்கும் வள்ளலாக பூரண உயிர்ப்புடன்,  சேலம் சட்டக் கல்லூரி அருகில் மாயம்மா அவர்கள் சமாதி கொண்டிருக்கிறார்.

முகவரி:
ஸ்ரீ தேவி மாயம்மா கோவில்,
சட்டக் கல்லூரி,சாந்திநகர்,
சின்னகொல்லபட்டி,சேலம்.

லொகேஷன்:https://goo.gl/maps/UUbqE5p6eXAj3uTR9

------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Wednesday, 26 May 2021

கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமி வரலாறு

கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமி,அரிமளம்,புதுக்கோட்டை

 

 


  

வரலாறு:
                         கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமி 1831-ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில்... திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார் ஸ்ரீசுந்தர சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்திரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள்- காமாட்சி அம்மாள் தம்பதியின் 2-வது மகனாகப் பிறந்தார். மூத்தவன்- குப்பாணி சிவம்.
அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர சுவாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே, தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக, கங்கைகொண்டானில் இருந்து பத்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு ஐந்து வயதில் அட்சர அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தமடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள், 'தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம்! இப்படியரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்' என்று பெருமிதம் கொண்டனர்.

                           சிவ பூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம், தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யோகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம்.
நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானகிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு! தன்னுடைய மாப்பிள்ளையின் சிவ பக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர், சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன், நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.
இந்த நிலையில், அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம், இவரை தமது குருவாக வும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தர சுவாமிகள், தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும்
தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர், தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து, அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே! இதையடுத்து சில ஆண்டுகளில், சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர், இவருக்கு சீடர்களானார்கள்.

                           ஒருமுறை, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆலயங்களை தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது, 'சூத சம்ஹிதை' குறித்து உரை நிகழ்த்தினார் (சிவ பக்தி, சிவ பூஜை, ஆசனங்கள், அஷ்டமா ஸித்தி, அஷ்டமாயோகம் ஆகி யவை குறித்து சூத பவுராணிகர் அருளியதே சூத சம்ஹிதை!); சிவ பஜனை செய்தார்.

                          புனித பூமியாம் காசிக்குச் சென்று, கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதர்-விசாலட்சுமி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள், யாத்திரை புறப் பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து, அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி, பின்னர் காசியை அடைந்தார்.
கங்கையில் நீராடினார்; ஆலயங்கள் பலவற்றையும் தரிசித்தார்; காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது, இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப் பெற்ற மகா கணபதி
சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?
தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை... அவர், கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து, தானும் அங்கு சென்று சந்தித்தாராம் சுந்தர சுவாமிகள்! இருவரும்
பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனராம்! மணிகர்ணிகா கட்ட படித்துறையில்... இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்!

                          காசியில் இருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர சுவாமிகள் பத்தமடை, கோடகநல்லூர், சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். தனது குரு, திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார். கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்ப வரை சந்தித்த பின், வித்வத் சந்நியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.

                           சுவாமிகள் ஒருமுறை, சுத்த மல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி, அதற்கு அழகிய தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலுமாய் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது, ஒரு நாள் திடீரென எழுந்து, உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.
அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம்- சுவாமிகளது தலையில் கட்டுக் குடுமியும் இல்லை; திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்து விட்டு வந்தவர், தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன் பிறகுதான் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்த தாகக் கருதினர் அவரது சீடர்கள்.
        
                           தனது 23-ஆம் வயதில், நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள், அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால், நெல்லையை அடுத்த கோடகநல்லூரை அடைந்தார். இங்கு, தாமிரபரணிக் கரையோரத்தில், நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதருக்குள் சென்று, எவரும் தன்னை அணுகமுடியாதபடி நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவாராம் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள், சுவாமிகளைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல், உணவுடன் திரும்பிச் செல்வார்களாம்!

                         ஆனால், பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவும் இன்றி, சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது, ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றி பசியாற்றியதுடன், சுந்தர சுவாமிகளுக்கு தரிசனம் தந்தும் அருளியுள்ளாராம்!

                          கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி, சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார். யோகிகளுக்கே உண்டான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால், பின்னாளில் இவர், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் ஆனார்.

                          ஒரு தீபாவளி தினம்! காஞ்சிபுரம் கம்பை நதிக் கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர சுவாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் சிலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். உணவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற விவரித்த சுவாமிகள், "பரிசுத்தமான ஒவ்வொருவரது வலது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே, உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம்" என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், காமாட்சியம்மன் ஆலய அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர், தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே, கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள், மழையில் நனைந்து அணைந்தது. இது, சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

                           சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர், பக்தர் எவரையேனும் அனுப்பி, நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து, அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தா வுக்கு வந்தது ஒரு யோசனை! மெள்ள சுவாமிகளை நெருங்கி... "பூஜைக்கு தேவையான நெருப்பை, தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி?" என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். 'சுவாமிகளையா சோதிப்பது?' என்று முணுமுணுத்தனர்.
    
                           ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள், "தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள்" என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான்! தகித்து எழுந்தது நெருப்பு. இதைக் கொண்டு, பூஜைக்குத் தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா, சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள், "இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம்" என்றார்.

                           சிருங்கேரி ஜகத்குரு மகாசந்நிதானம், ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர சுவாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால், அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சந்நிதானம். அத்துடன் தன்னைச் சந்திக் கக் கூடி இருந்த மக்கள் இடையே, "சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர்" என்று கூறி, அவரது பெருமைகளை விவரித்தார்.
சுந்தர சுவாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள், சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளார். அப்போது, "ஆலயத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப் பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில், திருமேனியில் திருநீறும் கழுத் தில் ருத்திராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று, சிவாலயங்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனர்" என்று கூறியுள்ளாராம் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல், சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

                           செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும் போது, ஏகமுக ருத்திராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பாராம் சுந்தர சுவாமிகள். இதைக் கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும், ஏகமுக ருத்திராட்சத்தை அணியத் துவங் கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள், ஏகமுக ருத்திராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்!

                           திருவையாறு பகுதியில் உள்ள ஸப்தஸ்தான ஆலயங்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872-ல் கும்பாபிஷேகம் செய்து வைத்தார் சுவாமிகள்.

                           வைகாசி மாதத்தில் ஒரே நாளில்... ஒரே நேரத்தில்... ஏழு ஆலயங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம்... ஏழு கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தாராம் சுவாமிகள்! இதை அறிந்த அவரின் சீடர்கள் உட்பட எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.

                          இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள், மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சமையலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் சுவாமிகளிடம் ஓடிவந்து, "உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை. என்ன செய்வது?" என்று தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள், "அவ்வளவுதானே...கோயில் குளத்தில் இருந்து நான்கு குடங்களில் தண்ணீர் எடுத்து வா" என்றார்.

                          'நெய் கேட்டால் நீரை எடுத்து வரச் சொல்கிறாரே...' என்று அந்த அன்பர் குழம்பியபடி நின்றார். "அட... சீக்கிரம் எடுத்துட்டு வாப்பா. அந்தணர்கள் பசியில இருக்காங்க..." என்று அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அன்பரும் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்து வந்து, சுவாமிகளுக்கு முன்னே வைத்தார்.அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந் தனர். கையில் கொஞ்சமாக திருநீறை எடுத்த சுவாமிகள், ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து, அந்த திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம், குடங்கள் அனைத்திலும் கமகமத்தது நெய் வாசனை. அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்றைக்குப் பயன்படுத்தப்பட்டது.


                         இதையடுத்து சில நிமிடங்களில், நெய்யை எடுத்து வந்து இறக்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள், "இதில் நான்கு குட நெய்யை மட்டும் கோயில் குளத்தில் சேர்த்து விடுங்கள். இறைவன் கொடுத்ததை அவருக்கு திருப்பித் தருவதுதான் மரியாதை" என்றார். அதன்படியே, நான்கு குட நெய், குளத்தில் ஊற்றப்பட்டது.


                          இதே திருவையாறு கும்பாபிஷேகத்தின் போது, இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர சுவாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்தார். 'சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை' என்று சொல்லி, பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.மெள்ள புன்னகைத்த சுவாமிகள், தனது திருக்கரத் தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும் படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி, பொட்டலத்தை திறந்தார். அதில்... சுவையான பழ வகைகள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில், பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே...!


                           தை அமாவாசையின் போது (1864-ஆம் ஆண்டு) நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல்; பொதிகை மலை தரிசனம்; குறுக்குத் துறை முருகப் பெருமானின் ஆலய விஜயம் உள்ளிட்ட
பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஒட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க, புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.

                            அப்போதுதான்... அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில்... அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்ப செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.இதையடுத்து, பல தலங்களுக் கும் சென்றவர், மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது, அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது, அந்த அற்புதம் நிகழ்ந்தது.


                       எதிரே சாலையில் நின்றபடி, 'வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு' என்று சொல்லி மறைந்தார் சுந்தர சுவாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம்... 'என்னடா இது? வண்டில அசந்து தூங்கிட்டிருந்த சாமீ, திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு?' என்று! பிறகு வண்டியைத் திருப்பி, மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள், "இப்ப நாம எங்கேப்பா இருக்கோம்?" என்று கேட்க... "புதுக்கோட்டையை நெருங்கிகிட்டு இருக்கோம் சாமீ" என்று பதில் சொன்னான் வண்டிக்காரன்.சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னது... புதுக்கோட்டைக்கா...? ராமேஸ்வரம் போகலையா?" என்று கேட்டார். உடனே வண்டிக்காரன், "என்ன சாமீ... நீங்கதானே வண்டிக்கு எதிர்ல நின்னு 'புதுக்கோட்டைக்கே போடா'னு சொன்னீங்க?" என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள், "வண்டிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா..." என்று உறுதிபட தெரிவித்தார்.


                         பின்னர், திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்கு திரும்பியதோ... அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியதாம்! மரங்கள் விழுந்து, வீடுகள் சரிந்து, சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டன வாம்! ஆடு-மாடுகள் கூட நாசமாகி விட்டதாம்! மறுநாள்... விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான், சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர்.பின்னர், சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார், சிவாலய கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார்.

                           மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர், தண்ணீரில் அமர்ந்து யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து, நீரின் மேல் யோக நிஷ்டையில் இருந்தார் நாராயணசிவம். இதைக் கண்ட அன்பர்கள் பலரும், அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம், திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர், உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று, 'பொற்றாமரைக் குளத்தில் நாராயணசிவம் மூழ்கி விட்டார். எனவே அவரது உடலை மீட்டுத் தாருங்கள்' என்று தெரிவித்தார். இதையடுத்து பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி, தேடும் பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.
மூன்றாம் நாள்! அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். "நாராயணசிவத்தின் உடலை எப்படியேனும் மீட்டு,
தென் கரையில் உள்ள விபூதி விநாயகர் அருகே கொண்டு வந்து வைத்து விடுங்கள்' என்று காவல் துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.

                          இறந்த நாராயணசிவத்தை உயிர்ப்பித்து விடும்
எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை புரிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும்
சுவாமிகளை கேலி செய்தனர். 'தண்ணீரில் மூழ்கி
இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்கப் போறாராமா?' என்று கிண்டல் செய்தனர். இருப்பினும், 'நடப்பதைத்தான் பார்ப்போமே.' என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தனர். அப்போது, திடீரென நீரில் உடல் மிதந்தது கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர், நாராயணசிவத்தின் உடலை விபூதி விநாயகர் சந்நிதிக்கு அருகே கொண்டு வந்து கிடத்தினர்.

                           சுவாமிகள், இறைவனை பிரார்த்தித்தபடி, நாராயணசிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார்; சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார்; உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவிக் கொடுத்தார். அவ்வளவுதான்... மூன்று நாட்களாக சடலமாகக் கிடந்த நாராயணசிவம், உயிர்த்தெழுந்தார். சுந்தர சுவாமிகளின் திருப்பாதங் களில் விழுந்து வணங் கினார். சுவாமிகளது அற்புதத்தை அறிந்து, அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினர்.
இதையடுத்து, மதுரை யில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சாவூர், கபிஸ்தலம், சென்னை முதலான தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள், பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை 1873-ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.

                          தன் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். இவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் - தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள ஆலயம்! இறுதியாக நடத்திய கும்பாபிஷேகம், இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள ஆலயம்.

                           தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார் சுந்தர சுவாமிகள். அதன்படி 1878-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார் சுவாமிகள். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும், சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து, சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

முகவரி:
ஸ்ரீ சுந்தர சுவாமிகளின் அதிஷ்டானம்
அரிமளம்,புதுக்கோட்டை மாவட்டம்.

வழி: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள அரிமளம் என்ற ஊரில் கோவில் உள்ளது.

அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம் என்ற ஊரில் கோவில் உள்ளது.

லொகேஷன்:https://goo.gl/maps/FmuJSW2pJLJ4CHMB9

------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

ஸ்ரீ சதானந்த சுவாமி வரலாறு

ஸ்ரீ சதானந்த சுவாமி,சதானந்தபுரம்,சென்னை

 

 


 

வரலாறு:
                         ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்குமே ஒரு காரணம் இருக்கும். ஆனால் அந்த பிறப்பிற்கான காரணத்தை உணராமலே பல மனிதர்கள் வாழ்ந்து மடிகிறார்கள். தன்னை வென்றவன் இந்த உலகையே வென்ற வீரனை விட உயர்வானவன். தன்னை தானே வென்ற பல வீர துறவிகளை நாம் பார்த்து கொண்டு வருகிறோம்.

                          இவர் தஞ்சையில் உதித்த ஞானமனி. இவர் ஒரு பெரிய ராஜ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குடும்பம் ராயல் குடும்பம் மட்டுமல்ல. ராயர் குடும்பமும் கூட. ரங்கராயர் என்பவருக்கு மகனாக சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் அவதாரம் செய்தார். நன்றாக படித்தார். மிக புத்திசாலி மாணவர் என்று பெயர் வாங்கினார். பள்ளிகளில் நடந்த விளையாட்டு போட்டிகள், வீர போட்டிகள் என அனைத்திலும் இவர் ஒப்பார், மிக்கார் இல்லாதவராக திகழ்ந்தார். படித்த பின் ரயில்வே துறையில் உயர் அதிகாரி ஆனார்.

                            இவர் 3,4 வயது குழந்தையாக இருக்கும் பொழுது எல்லாம் கொட்டாவி விட்டு சுடக்கு போட்டால். இவர் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாள் யாராவது எஜமான் கூப்டீங்களா என்று ஓடி வந்து இவர் முன் கை கட்டி பவ்யத்துடனும், பயத்துடனும் நிற்பானாம். சதானந்தர் நான் ஒன்னும் உன்னை கூப்பிடவில்லை. இது அதிகார சுடக்கு அல்ல, கொட்டாவி சுடக்கு என்பாராம்.

                           அன்று பெரும்பாலான வீடுகளில் வேலையாட்களை பெயர் சொல்லி கூட அழைக்க மாட்டார்கள். சுடக்கு போட்டு தான் அழைப்பார்கள். எஜமான் 3 வயது. வேலையாள் 35 வயது என்றாலும் 35 வயது உள்ள வேலையாள் மரியாதையாக கை கட்டி கூனி, குறுகி பயந்து நடுங்கி கொண்டு தான் தனது எஜமானரிடம் பேசுவான். அன்று எஜமானர்கள் வார்த்தைகளில் வேலையாட்களை அதிகாரம் செய்தல் ரொம்ப கம்மி. பார்வையாலேயே அதிகாரம் செய்வார்கள். அந்த பார்வையை பார்த்தே வேலையாட்கள் எஜமானருக்கு பயந்து நடுங்கி கொண்டு சேவகம் செய்வார்கள்.

                          அது போன்ற ஒரு கால கட்டத்தில் அதுவும் ராஜ குடும்பத்தில் சதானந்தர் அவர்கள் பிறந்து. பின்னர் கவெர்மென்ட் உத்யோகம். ரயில்வே அதிகாரினா சும்மாவா. அந்த ராஜ வாழ்க்கை, அரசாங்க உத்யோகம் அனைத்தையும் உதறி தள்ளி விட்டு அவர் ஒருநாள் சன்யாசி ஆனார். இறைவன் இந்த உலகில் ஒவ்வோர் உயிரையும் ஒரு காரணத்திற்காக படைத்து உள்ளார். சதானந்த சுவாமிகள் இந்த புவியில் அவதாரம் செய்ததன் நோக்கம். ராஜ போகத்தை அனுபவிக்க அல்ல. அதனினும் உயர்ந்த ராஜ யோகத்தை அனுபவிக்க என்பதை இறைவன் இவருக்கு உணர்த்தினார்.
 

                          நாம் சந்நியாசியாக ஆக வேண்டும் என்றால் நமக்கு சந்யாச தீட்ஷை கொடுக்க ஒரு தகுதியான குரு தேவை. அத்தகைய தகுதியான குருவிற்கு நாம் எங்கே? போவது. அவரை எப்படி? கண்டு பிடிப்பது.

                           அனைத்து வினாக்களுக்கும் விடை ஆழ்மன தியானம் மூலமாக கிடைக்கும். சுவாமிகள் சிறு வயதில் இருந்தே ஆழ்மன தியானத்தில் மிக வல்லவர். அவர் தனது கண்களை மூடி கொண்டு ஆழ்மன தியானம் செய்தார். அந்த ஆழ்மன தியானத்தின் மூலம் கிடைத்த பதிலின் வாயிலாக அவர் சேந்தமங்கலம் சென்று. அங்கே இருக்கும் அவதூத் சுயம் பிரகாச மௌன சுவாமிகளின் பாதார விந்தங்களில் சரண் அடைந்தார். என்னை தங்களது சீடனாக ஏற்று கொள்ள வேண்டும் என்றார். மௌன சுவாமிகள் நீ இங்கு வருவாய் என்பது எனக்கு முன்பாகவே தெரியும். உன்னை யாம் எனது சீடனாக ஏற்று கொண்டோம் என்றார்.

                          சதானந்த சுவாமிகளின் குருவான அவதூத் ஸ்வயம் பிரகாச மௌன சுவாமிகள்.நாமக்கல் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சேந்தமங்கலம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தத்தாத்ரேயர் ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் சன்னியாசி கரடு என்றும் சன்னியாசி குன்று என்றும் அழைக்கப்பட்ட இந்த ஸ்தலம், தற்போது தத்தகிரி முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

                           ஞானம் பெற்ற பல முனிவர்கள், தவசிகள், யோகிகள், அருளாளர்கள், ஆன்மீகவாதிகள், சித்தர்கள் எனப் பலர் இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இத்திருக்கோயிலில் 29.12.1948 அன்று சதானந்தரின் குரு அவதூத் சுயம் பிரகாச மௌன சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.

                        சதானந்த ஸ்வாமிகள்  பற்றி அறிய வேண்டும் என்றால் நாம் நாராயண ஸ்வாமி  பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் சில குருமார்களின் புனிதம் அறிய அவர்களின் சீடர்களின் மகத்துவம் போதும்.சீடர் தயாராக இருந்தால்,குரு தானாக வந்து வழிகாட்டுவார்.அது போன்ற ஒரு நிகழ்வுகளில் தான் சதானந்த சுவாமிகளின் அருள் நிலை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

                           நாராயண ஸ்வாமி என்பவர் தான் சுவாமிகளை 1909 ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். சாது திரு நாராயணஸ்வாமி சில ஆண்டுகளுக்குப் பின்னால் தானும் வேலையை ராஜினமா செய்து விட்டு தனது குருவான திரு சதானந்த ஸ்வாமி அவர்களை அழைத்துக் கொண்டு ஆலப்பாக்கத்திற்கு வந்து விட்டாராம்.திரு நாராயணஸ்வாமிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான  திரு துளசிங்கம் மூலமாகவே நமக்கு ஆலப்பாக்கம் திரு சதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கைப் பற்றிய செய்தி கிடைத்து உள்ளது.  தற்போது திரு துளசிங்கம் அவர்களும் சமாதி அடைந்து விட்டார்.

                           திரு நாராயணஸ்வாமி எதற்காக போலிஸ் உத்தியோகத்தை ராஜினமா செய்து விட்டு வந்து அவரும் ஒரு சாதுவாக மாறினார் ?  அதற்கு ஒரு பின்னணி கதை உண்டு.  போலிஸ் உத்தியோகத்தில் இருந்தபோது  திரு நாராயணஸ்வாமி திருவிலக்கேணிப் பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைகள் எதுவும் இல்லை.
திரு நாராயணஸ்வாமி போலிஸ் உத்தியோகத்தில் இருந்தபோது சென்னையில் நிறைய இடங்களில் திருட்டுக்கள்  நடந்து வந்தன. திருடர்களை கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது.  அந்த திருடர்கள் கோஷ்டியில் ஆறு நபர்கள் இருந்தனராம். அவர்கள் ஒருமுறை ஒரு வீட்டில் துணிமணிகள் மற்றும் சாமான்களை திருடிக் கொண்டு வந்து அவற்றை பின்னர் எடுத்துச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு  சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் இருந்த ஒரு தாழம்பூ புதரில் புதைத்து வைத்து விட்டார்கள்  .

                           அதே நேரத்தில் அந்தத் திருட்டு நடந்ததும் திரு நாராயணஸ்வாமியின் மேல் அதிகாரியாக இருந்தவர் திரு நாராயணஸ்வாமி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு போலிஸ்காரரிடம் என இருவரிடமும் 'நீங்கள் அந்த திருடர்களைப் உடனடியாக  கண்டு பிடிக்காவிடில் உங்களை பணியில் இருந்து நீக்கி விடுவேன்' எனக் கடிந்து  கொள்ள  இருவரும் மன வருத்தத்துடன் அது பற்றி  பேசிக் கொண்டே சென்னையில் எக்மோர் எனும் பகுதியில் உள்ள  கண் சிகிச்சை மருத்துவ மனை வழியே நடந்து கொண்டு வருகையில் கன்னிமாரா வாசகசாலை அருகில் உள்ள ஆற்றங்கரை பாலத்தின் மீது அமர்ந்து இருந்த ஒரு சாமியார் அவர்களுக்கு  மிகவும் பழக்கமானவரைப் போல 'நாராயணா....நாராயணா..இங்கே வா'  என திரு நாராயணஸ்வாமியை அழைத்தார். அதைக் கேட்ட அவருடைய போலிஸ் நண்பரான முஸ்லிம் பாய் 'யாரோ ஒரு கிழவன் உன்னை பேர் சொல்லி அழைக்கின்றான் பார்' எனக் கேலியாகக் கூற அடுத்த கணம் அந்த சாமியார் அந்த முஸ்லிம் பாயின் பெயரையும் கூறி இருவரையும் தன் அருகில் வருமாறு செய்கை காட்டினார். அவர்களும் அவர் அருகில் சென்று 'எங்களை உனக்கு எப்படித் தெரியும்?. எங்களை எதற்காக  அழைத்தாய்?'  என்று கோபமாகக் கேட்க அவர் தயங்காமல் 'உடனே நீங்கள் இருவரும் இங்கிருந்து கிளம்பிச் சென்று நீங்கள் தேடும் திருடனை பிடியுங்கள். அவர்கள் இப்போது சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் ஒரு தாழம்பூ புதரில் திருடிய பொருட்களை புதைத்து வைத்து விட்டு அமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் . உடனே சென்றால் அவர்களைப் அங்கு பிடித்து விடலாம்' என்றார்.

                          அதைக் கேட்ட அவர்கள் அவர் மீது சந்தேகம் அடைந்து  'சரி நீங்கள் கூறியது நிஜம் என்றால் உடனே அந்த  இடத்துக்கு நாங்கள் கிளம்பிச் சென்று அவர்களைப் பிடித்து வருகிறோம். ஆனால் அதுவரை நீங்கள் இங்கேயே இருப்பீர்களா' எனக் கேட்க அந்த சாமியார் கூறினார் 'நான் இங்கே இருந்தாலும் இருப்பேன், இல்லை என்றால் இல்லை. அதற்கு உறுதி தர முடியாது.  உங்களுக்கு தேவை என்றால் அவர்களை உடனே சென்று பிடித்துச் செல்லுங்கள்.  இல்லை என்றால் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு அதனால் ஒன்றும் ஆகப் போவது இல்லை ' என்று கூறி விட்டார்.

                           ஆகவே எதோ ஒரு உந்துதலில் அவர்கள் அந்த சாமியார் கூறிய இடத்துக்கு சென்று பார்க்க முடிவு செய்தார்கள். அந்த காலங்களில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது. பஸ்களும் இல்லை. ட்ராம் வண்டியே இருந்தது. ஆகவே அந்த இரண்டு போலிஸ்காரர்களும் ஒரு ஜட்கா வண்டியை எடுத்துக் கொண்டு அந்த சாமியார் கூறிய இடத்துக்குப் போய் அங்கிருந்த ஆறு திருடர்களையும் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். வேலையில் நல்ல பெயரும் பெற்றார்கள். அடுத்து அவர்கள் எக்மோருக்கு அருகில் இருந்த ஆற்றின் கரைக்கு வந்து அந்த  இடத்தில் சாமியாரை தேடினார்கள். ஆனால் அவரைக் காணவில்லை. அது முதல் திரு நாராயணஸ்வாமிக்கு அந்த சாமியாரை எப்படியாவதுக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

                          காந்தம் இரும்பை இழுப்பதை போல் நாராயண சுவாமிகளை சதானந்தர் அவர்கள் இழுத்தார்.ஞான குருவின் தொடர்பு ஒரு ஜென்மத்தில் வருவதல்ல. நாராயண சுவாமி அவர்களின் முன் ஜென்ம தவ தொடர்பினால் விட்ட குறை, தொட்ட குறை என அவருக்கு சதானந்தரை காணும் பாக்கியம் கிடைத்தது.

                          சென்னை மயிலாப்பூரில் சதானந்த சுவாமிகள் தங்கியிருந்த பொழுது நாராயண சுவாமி சதானந்தரை தரிசனம் செய்தார். சுவாமி தங்கள் அருள் இல்லை என்றால் எங்களால் அன்று திருடர்களை பிடித்து இருக்க முடியாது உங்களுக்கு நன்றி என்றார்

                          சதானந்த சுவாமிகள் சிரித்தவாறே. நீ உலகின் மிகப்பெரிய திருடர்களான வெள்ளைக்கார அரசாங்கத்திற்கு அடியாள் வேலை பார்த்து சம்பாதிக்கிறாயே. இதைப்பற்றி நீ என்றாவது சிந்தித்தது உண்டா என்று சதானந்த சுவாமிகள் கேட்க. நாராயண சுவாமிகள் அது குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்.

                          சதானந்த சுவாமிகள் திருமயிலாப்பூரில் தங்கி இருந்த பொழுது நாராயண சாமி திருவல்லிக்கேணியில் குடி இருந்தார். தினமும் ஒருவேளையாவது நாராயண சாமி சதானந்த சுவாமிகளை தரிசித்து கொண்டிருந்தார். நாராயண சாமிக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை.

                          சுமார் 130 ஆண்டுகளுக்கு முன். திருமணம் ஆன அடுத்த வருடமே மனைவி ஒரு அழகான ஆண் குழந்தை பெற்று கொடுத்தாலும் அதற்கு அடுத்த வருடமே ஆண் விருப்பப்பட்டால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம். ஏன்? நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று கணவனை கேள்வி கேட்கும் அதிகாரமே அன்று மனைவிக்கு இல்லை. குழந்தை பிறக்காமல் இருக்க பெண் மட்டும் காரணம் அல்ல. ஆண்களிடம் குறை இருந்தாலும் குழந்தை பிறக்காது என்கிற அறிவுலாம் அன்று இல்லை. அதுபோல் குறைபாடு உள்ள ஒருவனை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் மலடி என்னும் பட்டமும் பெண்ணிற்கு கிடைக்கும். ஆனால் குறைபாடு உள்ள ஒரு ஆணை மலடன் என்றெல்லாம் அழைக்க மாட்டார்கள்.

                           அது போன்ற கால கட்டத்திலும் திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகி தனக்கு என்று ஒரு வாரிசு உருவாகாத நிலையிலும் நாராயண சாமி ஏக பத்தினி விருதனாக வாழ்ந்தார். நாராயண சாமி திருவல்லிக்கேணியில் இருந்து மயிலாப்பூருக்கு தினமும் சதானந்த சுவாமிகளை பார்க்க வருவார். சதானந்த சுவாமிகளோடு நெடு நேரம் அமர்ந்து பேசுவார். தனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதற்கு சுவாமிகள் அருள்புரிய வேண்டும் என்று சொல்ல வாய் எடுப்பார். ஆனால் அவருக்கு ஏனோ தயக்கம். இப்டியே ஒரு 4, 5 நாட்கள் நாராயண சாமிக்கு நடந்து கொண்டு இருந்தது.ஒருநாள் சதானந்தர் அவராகவே கேட்டார்.

                           உனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. உன் குறை என் அருளால் தீரும் என்கிற நம்பிக்கை உனக்கு இருக்கு. ஆனால் அதை கேட்க உனக்கு என்ன? தயக்கம். என்று சதானந்தர் நாராயண சாமியை பார்த்து கேட்க. சுவாமி என்று சொன்னவாரே நாராயண சாமி சதானந்தரின் பாதம் பணிந்தார்.

                           நாராயணா நீ நாளை வரும் பொழுது உன் மனைவியையும் இங்கே அழைத்து வா என்றார். அதன்படி அவர் மறுநாள் தனது இல்லத்தரசியோடு வந்து சுவாமிகளை தரிசித்தார். சுவாமிகள் 3 பிடி சோறை கொடுத்து அதை கணவன், மனைவி இருவரையும் சாப்பிட சொன்னார்.

                           சதானந்த சுவாமிகள் லேசாக தழுதழுத்த குரலில் நாராயணா நான் சொல்ல போவதை கேட்டு நீ உன் மனதை தேற்றிக்கொள். உனக்கு மொத்தம் 3 குழந்தைகள் பிறப்பார்கள். 2 ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை ஆனால் என்று சதானந்த சுவாமிகள் இழுத்தார். சதானந்த சுவாமிகளின் கண்கள் லேசாக கலங்கியது.

                          நாராயண சாமி சதானந்தரிடம். சுவாமி . 10 ஆண்டுகள் குழந்தைக்காக இன்னொரு திருமணம் கூட செய்யாமல் நான் பொறுமையாக இருக்கவில்லையா. அடியேனுக்கு எத்தகைய துன்பங்கள் வந்தாலும். என் முற்பிறவி கர்ம வினை, மற்றும் இப்பிறவியில் வெள்ளைக்கார அரசில் காவல் துறையில் சேர்ந்த பாவத்தால் வரும் வினை என்பதை புரிந்து கொண்டு. துன்பங்களை தாங்கும் மனப்பக்குவம் அடியேனுக்கு இருக்கிறது. என் இதையம் எதையும் தாங்கும் இதையம். என் இல்லத்து அரசி மரகதமும் அவ்வாறே. நீங்கள் தயங்காமல் சொல்லுங்கள் என்று நாராயண சுவாமி சதானந்தரிடம் சொல்ல.

                           சதானந்த சுவாமிகள் சொன்னபடியே முதலில் பிறந்த குழந்தை கால் ஊனமாக கிரஹண நேரத்தில் பிறந்தது. ஆனால் அந்த குழந்தையின் மனம் ஊனம் இன்றி நாராயண சுவாமி வளர்த்தார்.

                           நாராயண சாமிக்கு முதலில் பிறந்த குழந்தை ஊனமாக பிறந்தாலும் அதன் பின் பிறந்த மகனும், மகளும் ஆரோக்யமாக பிறந்தார்கள். நாராயண சாமிக்கு கொஞ்சம் கொஞ்சமாக இல்லறத்தில் நாட்டம் குறைய ஆரபித்தது. துறவறத்தை நோக்கி அவரின் கவனம் திரும்பியது. சாதாரண நாராயண சுவாமி நாராயண சுவாமிகளாக மாறி கொண்டு வந்தார்.

                           நாராயண சுவாமி பெருங்குளத்தூர் அருகே உள்ள தனது கிராமத்திற்கு செல்ல திட்டம் இட்டார்.அவர் திட்டம் இடும் முன்பே சதானந்த சுவாமிகள் தான் ஜீவ சமாதி அடைய போகும் இடம் அது தான் என தேர்வு செய்து விட்டார்.சதானந்த சுவாமிகளிடம் வந்த நாராயண சுவாமிகள். நான் எனது பாவப்பட்ட வேலையை விடப்போகிறேன். என் சொந்த கிராமத்திற்கு போய் விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னார். சதானந்த சுவாமிகள் நல்ல விஷயம். நானும் உன்னோடு வருகிறேன். இனி இறுதிவரை நான் அங்கு தான் இருப்பேன். எனது அனைத்து சக்திகளும் அந்த மண்ணில் இருக்கும் என்று சொல்ல.

                           அப்பொழுது நாராயண சாமி அடைந்த அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சதானந்த சுவாமிகள் நாராயண சாமியின் குடும்பத்தோடு பெருங்குளத்தூர் சென்றார். அங்கு உள்ள கிராம மக்களோடு மக்களாக அவர் வாழ்ந்தார். பலரது தீராத வினைகள் அவரின் அருளால் தீர்ந்தது.

                           ஒருநாள் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக சதானந்தரை பார்க்க வந்தார்கள். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லை தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று சொல்ல சுவாமிகள் உடனே அருகில் உள்ள பிள்ளையாரை பார்த்தார்.பிள்ளையார் விக்ரகத்தை தலைகீழாக வையுங்கள் என்று கிராம மக்களிடம் சொன்னார்.

                           பல ஆண்டுகளாக மழை இந்த கிராமத்திற்கு மழை இல்லை என்று சதானந்த சுவாமிகளிடம் வந்து முறையிட. அவர் அங்கு உள்ள விநாயகர் விக்ரகத்தை தலைக்கீழாக வைக்க சொல்லி சொன்னார். அந்த கிராம மக்களும் அவ்வாறே வைத்தார்கள். வைத்த சில நிமிடங்களில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பின் மழையால் தெரு எங்கும் வெள்ளம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது. கிராம மக்கள் மீண்டும் வந்தார்கள். சுவாமி மழை போதும். மழை நிற்க அருள் புரியுங்கள் என்று வேண்டினார்கள். சதானந்த சுவாமிகள் தலைகீழாக இருக்கும் விநாயகரை நேராக வைக்க சொன்னார். நேராக வைத்த அடுத்த 2 நிமிடங்களில் மழை நின்றது. என்ன? ஆச்சர்யம்.

                           ஆசிரமம் அமைந்ததும் திரு நாராயணஸ்வாமிக்கு அந்த சாமியார் ஒரு கடுமையான உத்தரவு போட்டார். ' உன்னுடைய மகள் திருமணம் ஆகும்வரை எனக்கு இங்கு வந்து தொண்டு செய்யக் கூடாது. நடு இரவில் வீட்டை விட்டு வரக் கூடாது' .

                           சாமியார் கூறிய கட்டளையை சிரத்தையுடன் மேற்கொண்ட  சாது திரு நாராயணஸ்வாமி தனது மகளை திருமணம் செய்து கொடுத்தப் பின் வீட்டை துறந்து விட்டு அவருடைய நண்பரான சாது திரு வேல்சாமி என்பவருடன் சேர்ந்து ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி பணிவிடைகள் செய்து கொண்டு இருந்தார்.

                           அந்த காலங்களில் திருமணங்கள் மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடும். ஆகவேதான் சாது திரு நாராயணஸ்வாமியின் மகளுக்கும் விவாகம் விரைவில் நடந்தது. அப்போது திரு துளசிங்கத்திற்கு வயது ஒன்பதாகியது. அவருடைய தம்பியின்  வயது ஆறு ஆயிற்று. ஆண்டுகள் கடந்தன. 1935 ஆம் ஆண்டு சாதுவாகி விட்ட திரு நாராயணஸ்வாமியும் ஜீவ சமாதி அடைந்தார்.

                           அவர் ஜீவ சமாதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தான்  சமாதி அடையப் போகும் விஷயத்தை தன் வீட்டாரிடம் கூறினார். அப்போது சாது திரு நாராயணஸ்வாமியை சந்தித்த அவரது சகோதரி 'அண்ணா நீ வீட்டில் வந்து சமாதி அடைய வேண்டும் . உன் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் போட வேண்டும்' என தன் விருப்பத்தைக் கூறினாள். அதற்கு சம்மதித்த சாது திரு நாராயணஸ்வாமி அங்கு செல்ல  ஒரு நிபந்தனைப் போட்டார்.   'வீட்டிற்கு வந்து சமாதி அடைந்தால் தனக்காக யாரும் ஒரு சொட்டு கண்ணீர் விடக் கூடாது. மேலும் எந்தவிதமான காரியங்களையும் செய்யாமல் கற்பூரம் மட்டுமே ஏற்றி வைத்து சமாதி செய்ய வேண்டும்'  என்பதே நிபந்தனை.

                           அதைத் தவிர தன்னை எப்படி சமாதி செய்ய வேண்டும் என்பதையும் அவருடைய சகோதரிக்கும் கடைசி மகனுக்கும் எடுத்துக் கூறினார். அவர் விருப்பத்தை ஏற்று சமாதி அடைய இருந்த தினத்தன்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அன்று இரவு 12 மணி இருக்கும். வெளிச் சாலையில் இருந்து 'நாராயணா...நாராயணா' என மூன்று முறை யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. வெளியில் சென்று பார்த்தால் அங்கு யாருமே தென்படவில்லை. அவர்கள் உடனே உள்ளே சென்று சாது  திரு நாராயணஸ்வாமியைப் பார்க்க உட்கார்ந்து இருந்தவர் தனது வாயை இரண்டு முறை திறந்து மூடிக் கொள்ள அப்படியே அமர்ந்த நிலையிலேயே 1935 ஆம் வருடம்  ஜீவ சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்ததை நேரிலேயே இருந்து பார்த்தார் அவருடைய இரண்டாம் மகனான திரு துளசிங்கம் அவர்கள் .
சாது திரு நாராயண ஸ்வாமி விருப்பபடியே யாருமே ஒரு சொட்டு கண்ணீரும் விடவில்லை. அவர் கூறி இருந்தபடியே கற்பூரம் மட்டுமே ஏற்றி விட்டு அவரை சமாதி செய்தார்கள். ஒரு பண்டாரத்தைக் கொண்டு நாற்பது நாட்கள் பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் அமைத்தார்கள்.

                           அவர் சமாதி ஆன இரண்டு ஆண்டுகளில் அவர் நண்பராக இருந்த சாது திரு வேல்முருகனும் சமாதி அடைந்தார். அதன் பின் 19.12.2003 ஆம் ஆண்டு திரு துளசிங்கமும் சமாதி அடைந்தார்.

                          நாராயண சாமிகள் சதானந்தரின் பிரதான சீடராகி அவரிடம் ஏக ஸ்வாசம் முதல் நவகண்ட யோகம் வரை அனைத்தையும் கற்று அதை பயிற்சி செய்தாலும் அவர் துறவற தீட்ஷையை ஜீவ சமாதி ஆவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன் தான் வாங்கினார்.
நாராயண சாமி, நாராயண சுவாமிகள் ஆனார். அவரின் மகளை பகவத் கீதை படிக்க சொல்ல. நாராயண சுவாமிகளின் மகள் பகவத் கீதை படித்து கொண்டு இருக்கும் பொழுதே நாராயண சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.
 
                           சதானந்த சுவாமிகள் தை மாதம் மகம் நட்சத்திரத்தில். ஜீவ சமாதி அடைந்தார். ஊரே ஒன்று திரண்டு வந்தது. சுவாமிகள் நம்மை விட்டு பிரிய போகிறாரே என்று பலர் அழ. சுவாமிகள் எனக்கு இறப்பு என்பதே கிடையாது. இருப்பு மட்டுமே. என்று சொல்லி விட்டு பக்தர்களுக்கு சதானந்த சுவாமிகள் சில அமுத மொழிகளையும் வழங்கினார்.

1]என்னை நம்பிக்கையோடு வழிபடும் அடியார்களின் இடர்களை நான் களைவேன்.

2]தனது சித்தத்தை சிவன் பால் வைத்து வணங்கும் அடியார்கள் எனக்கு பிரியமானவர்கள்.

3] மக்கள் சேவை, மகேசன் சேவை இரண்டையும் இரண்டு கண்களாக பாவிப்பவர்களே உண்மையான சிவன் அடியார்கள்.

4]காக்கைக்கு உணவு இடுதல் எவ்வளவு புண்ணியமோ அதைவிட புண்ணியம் நடைபாதையில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு இடுதல்

5] உங்களுக்கு மிகப்பெரிய மன பாரம் வரும் நேரத்தில் உங்கள் மனம் என்னை நினைத்தால். நான் உங்களது மன பாரத்தை தாங்குவேன்.

6] நான் இறந்து விட்டேன் என்று நினைப்போர் யாரும் இனி இந்த பக்கமே வர வேண்டாம். என்னை நம்பிக்கையோடு நீங்கள் வழிபட்டால் நான் உங்களோடு பேசுவேன்.

7] இறைவனை என்றும் மறக்காது இருங்கள். அவனை மறக்காது இருந்தால். இனி பிறக்காத, இறக்காத நிலை வரும்.

8] சுய ஒழுக்கமே உண்மை ஆன்மீகம், அந்த சுய ஒழுக்கத்தை கடை பிடிக்காத ஒருவனுக்கு சிவனையோ, திருமாலையோ வேறு எந்த தெய்வத்தையும் வணங்கும் தகுதி இல்லை.

9] மன ஒருமைப்பாடு இன்றி பல மணி நேரங்கள் மந்திரங்கள் சொல்வதை விட. சில நிமிடங்கள் சித்தத்தை சிவன் பால் செலுத்தி தியானம் செய்தல் இன்னும் சிறந்தது.

10] ஞான மார்க்கம், தியான மார்க்கம் என்னும் இரண்டு பாதைகளும் ஒன்றாக இணைந்தால் தான் அதன் மூலம் நாம் கடவுளை அடைய முடியும்.

11] மனம் என்னும் பெட்டியை திறக்கும் மந்திர சாவி தான் தியானம். தியானத்தை முறையாக பழகுங்கள்.

போன்ற பல உபதேச மொழிகளை அடியார்களுக்கு அருளி விட்டு சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.


முகவரி:
ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் மடம்,
சதானந்தபுரம்,நியூ பெருங்களத்தூர் அருகில்,
சென்னை.

வழி:     
                         சென்னையில் இருந்து தாம்பரத்துக்கு அடுத்த ரயில் நிலையமான புதிய பெருங்குளத்தூர் ரெயில் சென்று இறங்கவும். அங்கிருந்து ஒரு வண்டியில் பெருங்குளத்தூர் போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கிருந்து ஆலம்பாக்கம் ஜீவா சமாதி ஆலயம் உள்ள இடத்தைக் கேட்டால் அங்கு செல்லும் வழியை யாரும் கூறுவார்கள். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் சமாதி ஆலயம் உள்ளது . தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சதானந்தபுரம் செல்ல நேரடியாக M55G, 55D, M118A பஸ்கள் உள்ளன.


லொகேஷன்:https://goo.gl/maps/9XiaMqqysAF7CLZi7
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Tuesday, 25 May 2021

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி வரலாறு

சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி,எக்ககுடி,உத்திரகோசமங்கை அருகில்,இராமநாதபுரம் மாவட்டம்

 

 

வரலாறு:
               
                         ஸ்ரீ செல்லப்ப சுவாமிகள் , சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரும், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதருமாவார். செல்லப்ப சுவாமிகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூர் என்ற ஊரில் அவதரித்தார். தன் குருநாதர் போன்று, பல சித்துகள் செய்தவர்.

                           சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தோன்றி, கட்டிக்குளம் குவளைவேலி, புதுக்குளம் கிராமங்களில் கோயில்கள் எழுப்பி சித்துகள் பல செய்து, பக்தர்களுக்கு அருள்புரிந்தவர். அவர் வழிவந்த தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், தங்கள் குரு ராமலிங்க சுவாமிகள் பெயரில் பல இடங்களில் மடங்களை நிறுவினார்.

                           ராமநாதபுரம் திருச்சுழி என்று வெவ்வேறு இடங்களில் ஆரிய சித்துகளைச் செய்து சஞ்சரித்து வந்த செல்லப்ப சுவாமிகள் ஒருநாள், ராமநாதபுரம் கண்மாய் மடக் குழியில் இறங்கினார். வெகுநேரம் அவரைக் காணாமல் அன்பர்கள் தவித்தனர். ஆனால் சுவாமிகள் அப்போது ராமநாதபுரம் அரண்மனை வாசலில் இருந்து கொண்டு ராஜாவுக்கு அவரது நோய்க்கான பச்சிலை மருந்துக்ளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.அன்பர்கள் இதைக் கண்டு அதிசயித்துப் போயினர். அன்று முதல் ராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க சேதுபதி அவரைப் பெரிதும் போற்றி வந்தார். இத்தகைய சிறப்புகளுடன் திகழ்ந்த செல்லப்ப சுவாமிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மாயாண்டி சுவாமிகள், அவரையே குருவாகக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து உபதேசம் செய்து வைத்தார்.

                           கட்டிக்குளத்தில் இருந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பின்னர் இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன் பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.

                         சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி 1900 சார்வரி ஆண்டு மார்கழி 06ஆம்  நாள்:20.12.1900 அன்று அனுச நட்சத்திரத்தில் சமாதி அடைத்தார்.


                           சுவாமிகள் சமாதி, பிரபல திருக்கோயில்கள் உடைய திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை ஆகிய இடங்களுக்கு, மிக அருகில் உள்ளது. அடியார்கள் பார்த்து வழிபட வேண்டிய ஒரு மகான்.

முகவரி:
சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமி மடம்,
எக்ககுடி, (உத்திரகோசமங்கை அருகில்),
இராமநாதபுரம் மாவட்டம்.

தொடர்புக்கு:80155 31453

லொகேஷன்:https://goo.gl/maps/yCDeHdbvBJvGApYi9

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Sunday, 23 May 2021

ஹர்பஜன்சிங் பாபா வரலாறு

ஹர்பஜன்சிங் பாபா,நாதூ லா கணவாய்,கிழக்கு சிக்கிம் மாவட்டம்,சிக்கிம்
 

 


வரலாறு:
                         நாதூ லா கணவாய் என்பது இமயமலையில் உள்ள ஒரு கணவாய். இது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி. திபெத்திய மொழியில் நாதூ என்றால் கேட்கும் காதுகள் என்றும் லா என்றால் கணவாய் என்றும் பொருள். இக்கணவாய் சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியர்கள் மட்டுமே இக்கணவாய்க்குச் செல்ல முடியும். அவர்களும் செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெற்றே செல்ல வேண்டும்.

                       நாதூ லா கணவாய் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் உள்ள மூன்று வணிகப்பாதைகளுள் ஒன்று.

                        ஜேலேப்லா பாஸ் மற்றும் நாதுலா பாஸ் ஆகிய இரு மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் நினைவான  கோவில் உள்ளது
                        
                         ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். 1968-ஆம் ஆண்டு சிக்கிம்மில் உள்ள நாதுலா எல்லைக்கு மாற்றப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில் நாதுலாவில் அடிக்கடி எல்லைச் சண்டைகள் நடைபெற்றுவந்த நேரம். இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்த நேரம். 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அவர் படையிலிருந்து ஓடிவிட்டார் என்ற செய்தியும் பரவியது.

                          அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார். இதனை கனவு கண்ட வீரர் அலட்சியப்படுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (அப்போதய வழக்கப்படி, இறந்த வீரர்களின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும். அவருடைய சீருடை மட்டுமே குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.) கனவில் தெரிவித்த அதே இடத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால், பட்டாலியன் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் மீது மரியாதை வரத்தொடங்கியுள்ளது. அவ்வப்போது ஹர்பஜன் சிங், வீரர்களின் கனவில் வந்து, 'நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், உங்களுக்காக எல்லையில் காவல் காக்கின்றேன், சீனா - இந்தியா மீது படையெடுத்தாலோ பிரச்சனை எழுப்ப முயன்றாலோ அதனை மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கின்றேன்' என்று கூறிவந்துள்ளார்.

                         இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்

                           ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம். (ஹர்பஜன் சிங் உடல் மீட்கப்படவில்லை, எனவே அவர் இறந்ததாக பதிவு செய்ய முடியாது. அவர் இறந்ததாக அறிவிக்க முடியாத நிலையில் அவருக்கான சம்பளத்தை இராணுவம் வழங்கியதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.).

                          ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். இந்த வழக்கம் மிகச்சமீபம் வரை நடந்தது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை பலதரப்பில் இருந்து விமர்சனத்திற்கு ஆளானது. பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையடுத்து, இந்திய இராணுவம் சத்தமில்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு கொடுத்துவிட்டது. இதற்குள்ளாக இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.

                        இராணுவம் இவரை பணியிலிருந்து விடுவித்தாலும், ஹர்பஜன் சிங் என்பவர் 'பாபா ஹர்பஜன் சிங்' என்று வீரர்களால் போற்றப்படுவதால், எல்லைப்புற சாலைகள் அமைப்பான 'கிரெப்' (GREF) ஹர்பஜன் சிங்கிற்கு மறுவேலை வழங்கியுள்ளது. இப்போது கிரெப் ஊழியராக அவர் வருடத்திற்கு இரண்டு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று வருகின்றார். நாதுலாவில் உள்ள அவர் கோவிலில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி அவருடைய குடும்பத்திற்கு அனுப்பப்படுகின்றது. பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள். ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார்.

லொகேஷன்:https://goo.gl/maps/WnrinUb9wGKBg4yc9
-----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

சித்தயோகி பிரம்மஸ்ரீ சாமய்யா வரலாறு

சித்தயோகி பிரம்மஸ்ரீ சாமய்யா,பன்னிமடை,கோயம்புத்தூர்.

 

 


வரலாறு:

                          கோவை மாநகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பன்னிமடை (பண்ணீர்மடை) என்ற கிராமம். இங்கு 1892 ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிறந்தவர் யோகி சாமய்யா. சிறுவயதிலேயே அளவற்ற பக்தி செய்து வாழ்ந்தார் யோகி சாமய்யா. தனது பனிரெண்டாவது வயதில் தவம் செய்யத் துவங்கினார். தவம் செய்தால் உலக வாழ்க்கையில் பற்று இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய அவர் பெற்றோர்கள். இளம்வயதிலேயே தம் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தினார்கள். பிறகு திருமணம் செய்து வைத்தார்கள். இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்ட சிறிது காலத்தில் உலக மயக்கம் என்ற கண்ணாடித்திரை விலகியது. தன் பிறவியின் நோக்கம் நினைவிற்கு வந்தது.

                          1929-இல் இவரை சந்தித்த சைவ சமய யோகி "நீ பெரிய மகானாவாய்; சமாதி நிலை அடைவாய்", என வாழ்த்திச்சென்றார். சுமார் பத்து ஆண்டுகள் கழித்து தன் இமாலய யாத்திரையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்த சித்த யோகத்தின் தந்தை சுவாமி சிவானந்த பரமஹம்சரை சந்தித்து முறைப்படி உபதேசம் பெற்றார். அதை தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

                           அன்றைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த கவர்னர் ஜெனரல் 'எர்வின் ' கோவையில் நகர்வலம் வந்தார். அப்போது யோகி சாமய்யா சாலையை கடக்க குறுக்கே சென்று விட்டார். கோபம் கொண்ட ஜெனரல்  "அந்த பிச்சைக்காரனை அப்புறப்படுத்துங்கள்" என்று ஆணையிட்டார். தன்னை அகற்ற வந்தவர்களை நோக்கி "நில்" என சைகை செய்தார். அவர்கள் உட்பட குதிரைகளும் நகரமுடியாமல் நின்றுவிட்டன. அவர் மகிமை உணர்ந்த ஜெனரல் மன்னிப்புக் கோரிய பின்பே வண்டி நகர்ந்தது.    

                           மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்காக கோவை வந்திருந்தார். அச்சமயம் யோகி சாமய்யாவை சந்தித்து. "இந்தியாவிற்கு சுதந்திரம் எப்பொழுது கிடைக்கும்?" என்று கேட்டார்கள். அதற்கு யோகி சாமய்யா, "நான் ஜீவ சமாதி சென்று பத்து ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும்", என்றார்.

                          அதேபோன்று யோகி சாமய்யா மகாசமாதி நிலை அடைவதை மூன்று  மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டு 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள், உற்றார், உறவினர், ஊரார் முன்னிலையில் தன் தங்கையை அழைத்து தான் ஜீவ சமாதி அடையக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கூறி தனது தங்கையின் மடியில் அவரது தலையை வைத்தார், பிறகு இரு கண்களும் கற கற வென சுற்றி நின்று ஜீவ சமாதியில் ஆழ்ந்தார்! ஆனால் சமாதியின்  முறை அறியாத கிராம மக்கள் மற்றும்  அவரது உறவினர்கள் அவரை சாதாரணமாக மண்ணில் புதைத்து விட்டனர்.

                           மலேசிய பயணத்திலிருந்த அவருடைய குரு சிவானந்த பரமஹம்சருக்கு ஞான திருஸ்டியில் இது தெரியவர, தம் பயணத்தை முடித்துக்கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கோவை பன்னிமடை வந்து மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த யோகி சாமய்யாவின் உடலை வெளியே ஏடுத்தார்கள்.  உடல் கெடாமல் வெதுவெதுப்பாக இருந்தது. அவர் மீது குருவின் கைகள் பட்ட உடனேயே யோகி சாமய்யாவின் கண்களிலிருந்து நீர் தாரைதாரையாகச் சொறிவதை கண்ட மக்கள் மகாசமாதியின் மகத்துவத்தைக் கண்டு வியந்தனர். பின்பு யோகி சாமய்யாவின் விருப்பப்படியே குருவின் கைகளாலேயே அவருக்கு முறைப்படி சமாதி வைக்கப்பட்டது! 

                          அவருடைய குருபூஜை ஆண்டுதோறும் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ல் நடைபெற்று வருகிறது.

                           அவருடைய கணிப்புத்தவறாமல் சமாதி அடைந்து பத்து ஆண்டுகள் கழித்து அதே நாளில் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

முகவரி:
சித்தயோகி சாமய்யா ஜீவ ஐக்கிய நிலையம்,
பன்னிமடை,கோயம்புத்தூர்.

லொகேஷன்:https://goo.gl/maps/4i94eYahyaHQdXEV9

வழி:
கோயம்புத்தூர் to ஆனைகட்டி செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணுவாய் என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் இருந்து 2km தொலைவில் பன்னிமடை என்னும் சிறிய ஊர்.



----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

Friday, 21 May 2021

ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமி வரலாறு

ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமி,காதக்கிணறு,மதுரை

 

 


 

வரலாறு:

                           ஸ்ரீமத் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்பவர் மதுரையில் வாழ்ந்து கொண்டு இருந்த நெசவாள தம்பதியினருக்குப் பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயர் ரங்கா ஐயர் மற்றும் தாயாரின் பெயர் லஷ்மிபாய் என்பது. 1843 ஆம் ஆண்டு அவதரித்த அந்த தெய்வ அவதாரப் புருஷர் பிறந்தவுடன் அவருக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் சேர்த்த அவர் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். அவர் மனது முழுவதும் தெய்வீகத்திலேயே முழுகி இருந்தது.

                            ஆகவே அவருடைய பெற்றோர்கள் அவருடைய வயது பத்து ஆனபோது அவரை ஒரு வியாபாரக் கேந்திரத்தில் எழுத்தாயராக (Clerk) சேர்த்தார்கள். ஆனால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடியவில்லை . ஆகவே அந்த வேலையை துறந்தார். வேறயு வழி இன்றி அவருடைய பெற்றோர்கள் அவரை தமது குடும்பத் தொழிலான நெசவு வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த வேலையையும் அவரால் திறமையாக செய்ய முடியவில்லை. தந்தையின் கோபத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டே இருந்ததினால் தனது பதினாறாம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். எங்கு செல்வது என எண்ணியவர் அங்கிருந்து நேராக திருப்பரங்குன்றத்துக்கு சென்றார். அங்கிருந்த மலைப் பகுதியில் இருந்த ஒரு குகையில் சென்று தவம் செய்வது எப்படி என்பதை முறையாகப் பயிலாமலேயே ஒரு துறவி போல தவத்தில் அமர்ந்து கொண்டார். அது அவருக்கு இயற்கையிலேயே இருந்த தெய்வீகத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து இருந்தது. அவரை தேடிக் கொண்டு இருந்த அவருடைய அன்னை அவரை அங்கு வந்து கண்டு பிடித்தாள். அவரை மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்த போதும் அவர் அவளுடைய வேண்டுகோளை நிராகரித்து விட்டார். அந்த மலைப் பகுதியில் சுமார் பன்னிரண்டு வருடகாலம் அவர் தவத்தில் இருந்தாராம்.

                           இப்படியாக பன்னிரண்டு ஆண்டுகள் தவத்தில் இருந்தவர் தவத்தின் இடையே மனதில் தனக்கு கிடைத்தக் கட்டளைப்படி தனது குருநாதரைத் தேடி பரமக்குடிக்கு கிளம்பிச் சென்றார். அங்கு சென்றவர் நாகலிங்க அடிகளாரை சந்தித்தார். நாகலிங்க அடிகளார் பெரும் துறவி. அவரிடம் இருந்து சுமார் பதினெட்டே நாளில் அஷ்டாங்க சித்திகளைக் கற்றறிந்து சாதனை நிகழ்த்தினார். அமர்ந்த நிலையிலேயே பூமியில் இருந்து ஆறு அடி உயரத்தில் எழும்பும் அவருடைய சித்தியைக் கண்ட நாகலிங்க அடிகளார் அவருக்கு சதானந்த அடிகளார் என்ற பட்டதை வழங்கினார்.

                           மெல்ல மெல்ல அவருடையப் புகழ் அனைத்து இடங்களிலும் பரவத் துவங்க சிவகங்காவை சேர்ந்த மன்னர் அவரை தனது அரண்மனைக்கு அழைத்து கவுரவித்தார். அதற்கு முன்னால் அந்த மன்னன் அவரை சோதிக்க எண்ணி அவர் தங்கி இருந்த இடத்துக்கு ஒருநாள் அழகிய நடனக்காரியை அனுப்பினார். ஆனால் சதானந்த அடிகளாரோ அவளை சக்தி தேவதையாகவே கருதி அவளை வணங்கினார். மன்னன் வெட்கம் அடைந்தான்.

                           இன்னொரு முறை அந்த மன்னன் ஒரு இடத்தில் பூமியை தோண்டச் சொல்லி அதனடியில் ஒரு அறையை அமைத்து ஸ்வாமிகளை அதற்குள் சமாதி நிலையில் அமரச் சொல்லியப் பின் அந்த அறையை சிமென்ட் போட்டு நன்கு மூடச் செய்து அனைத்து இடங்களையும் அடைத்து விடுமாறுக் கூறினான். நாற்பது நாட்களுக்குப் பின் அங்கு ஒரு பெரிய வெடி சப்தம் கேட்டது. அந்த மூடிய அறைக்குள் இருந்து வெளியில் வந்த ஸ்வாமிகள் மதுரையில் கடை வீதியில் சென்று கொண்டு இருந்தார். இதன்மூலம் ஸ்வாமிகளுடைய பெருமை மேலும் அதிகரித்தது. இன்னொருமுறை மதுரையில் அவர் வெளிப் பகுதியில் ஒரு இடத்தில் தங்கி இருந்தார். வெயில் காலம் அது. அப்போது சூரிய ஒழி அவர் மீது படாமல் இருக்க ஒரு பெரிய நாகப்பாம்பு அவர் அருகில் சென்று படமெடுத்து நின்று அவர் மீது வெயில் படாமல் காத்ததாம். இன்னொருமுறை அவரைக் கொள்ளையடிக்கச் சென்ற திருடர்கள் மீது அவர் மணலை தூவ உடனடியாக அவர்கள் கண்களை இழந்தக் குருடர் ஆயினர். இப்படியாக மகிமைகளை செய்து கொண்டு இருந்தவர் அதன்பின் மதுரையில் இருந்துக் கிளம்பி ஆழ்வார் திருநகரி எனும் இடத்தை அடைந்து நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை பாடிக் கொண்டு இருந்த திருமால் பக்தரான வடபாத்ராராயரை சந்தித்து வைஷ்ணவ தீட்ஷைப் பெற்றார்.

                           மெல்ல மெல்ல அவர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை முறையாகக் கற்று முடித்தார். அங்கிருந்து திருபுவனம் என்ற ஊருக்குச் சென்றபோது அவருடைய ஒரு பக்தை அவருக்கு தன்னிடம் இருந்த நகைகளையும் சேலையையும் காணிக்கையாகக் கொடுக்க அந்த நிகழ்ச்சி மூலம் திருமால் தனக்கு அடிமையான ஒரு பெண் ரூபத்தில் சேவை செய்யக் கட்டளை இட்டு உள்ளார் எனக் கருதி அது முதல் சேலைகளை அணிந்தும், தலையில் கொண்டையை வைத்துக் கொண்டும் ஹரிபக்தியில் ஆழ்ந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் , ஸ்ரீரங்கம் போன்ற வைஷ்ணவத் தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்டார். ஸ்ரீரங்கத்தின் ஜீயர் ஸ்வாமிகள் அவருடைய ஹரிபக்தியைக் கண்டு வியந்து அவருக்கு நடனகோபாலனாயகி என்ற பெயரை சூட்டினார். அது முதல் அன்னாரின் பெயர் ஸ்ரீமத் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று ஆயிற்று. நடன கோபால நாயகி அதன்பின் தன்னை ஹரி பக்திக் கொண்ட ஒரு பெண்ணாகவே கருதி பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றபடி இருந்தவாறு ஸ்ரீ ரங்கநாதர் மீது நிறையப் பாடல்களைப் பாடினார். அவர் பாடல்கள் சௌராஷ்டிர மொழியிலும் தமிழிலும் இருந்தன. ஹரி பக்தி கானங்காளைப் பாடி அனைவரையும் ஆன்மீகத்தின்பால் இழுத்தார். பல கீர்த்தனைகளை இயற்றினார். அவர் பாடல்கள் மூலமே பக்தியைப் பரப்பி வந்தார்.

                            இப்படியாக பல இடங்களுக்கும் சென்று ஹரிபக்தியைப் பரப்பி மக்களுக்கு ஆன்மீக பக்தியை வளர்த்து வந்தவர் தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்தார். முதலில் தான் ஸ்ரீரங்கத்தில் சமாதி அடைய வேண்டும் என நினைத்தார். ஆனால் சில காரணங்களினால் அது நடைபெற முடியாததினால் அதனால் தாம் சமாதி அடைவதற்கு இரண்டு வருடத்துக்கு முன்பாகவே தமது சீடர்களிடம் அழகர் கோவில் அருகிலுள்ள காதக் கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தாவனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். காலம் மெல்ல மெல்ல உழன்றது. 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி அவருடைய எழுபத்தி ஒன்றாம் வயதில் வைகுண்ட ஏகாதசி நாளன்று அந்த சமாதிக் குழிக்குள் அமர்ந்து இருந்தவர் மகாவிஷ்ணுவின் திருவடிகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.

முகவரி:
ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமி கோவில்,
அழகர்கோவில் ரோடு,காதக்கிணறு,
மதுரை.

லொகேஷன்:https://goo.gl/maps/Cg3duRW9Pzk51dev9

----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/
 

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg